பக்கம்:இராஜேந்திரன்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாசின் ஆராய்ச்சி 38;

மென்றும் தற்காலம் சென்னையிலுள்ள உத்தியோகஸ்தர் களுள் சிறந்த இன்ஸ்பெக்டரான சுப்பராயலு நாயுடவர் களேத் துப்புத் துலக்கும்படி விட்டிருப்பதாகவும் எப்போது வேண்டுமானலும் டெலிபோன் மூலமாகக் கூப்பிட்டால் தாம் வரத் தயாராக இருப்பதாகவும் சொல்லிவிட்டு அவ ரிடமும் ராகவனிடமும் விடை பெற்றுக்கொண்டு பேர்ணுர். கமிஷனர் துரையவர்கள் சென்ற பின்பு பிரேதத்தை ஒரு வண்டியில் ஏற்றி டாக்டர்களிடம் பரிசோதனேக்கு அனுப்பிவிட்டு இன்னும் ஏதாவது துப்புக் கண்டுபிடிக்கலா மென்று இன்ஸ்பெக்டர் அந்த அறைக்குப் போய்க் கூர்மை யாகப் பார்த்ததில் விட்டு விட்டு ரத்தத் துளிகள் அங்கும் இங்கும் காணப்பட்டன. ரத்தத் துளிகள் விழுக் திருந்த வழியாகச் சென்றதில் ரங்கநாத்தின் அறையைத் தாண்டித் தாழ்வாரக் கடைசி வரையில் துளிகள் காணப் பட்டன. அதற்கப்பால் போவதற்கு இடமில்லை, ஆதலால் எப்படிப் போயிருக்கக் கூடுமென்று கூர்ந்து பார்த்ததில், ரங்கநாத் அறை வரையிலிருக்கும் துளிகளேவிட அறைக் குப் பின்னல் அதிகத் துளிகள் விழுந்திருந்ததால் அதிகத் துளிகள் போகும்போதும், மறுபடியும் திரும்பி வரும்போ தும் ஏற்பட்ட துளிகளாக இருக்குமென்று ஊகித்தார்.

உண்மையாக ரங்கநாத் கொன்றிருந்தால் அவர் கை விரல்கள் உருண்டு திரண்ட விரல்கள் ஆதலால் கொலை செய்யப்பட்ட அறையில் இருந்த ரத்தக் கறை அடையாளம் அவருடையதாக இருக்க முடியாதென்றும் அவரே கொன்றுவிட்டு வரும்போது ஏற்பட்ட ரத்தத் துளிக ளாகில் அவர் அறை அவருக்கு நன்ருகத் தெரியுமாதலால் தாழ்வாரத்தின் கடைசிவரையில் போய்த் திரும்ப வேண் டிய பிரமேயம் இல்லையாதலாலும் அவர் மூலமாக ஏற்பட்ட தல்லவென்றும் நிச்சயித்தார். இருந்தாலும் ஒருகால் கொன்றவர்கள் இன்னரென்று அவருக்குத் தெரிந்திருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/186&oldid=660566" இலிருந்து மீள்விக்கப்பட்டது