பக்கம்:இராஜேந்திரன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணையின் அலங்கோலம் 3}

ராகவனும் தாங்கள் இறங்கி இருக்கும் ஜாகைக்குப் போய்க் கோபண்ணுவின் வரவை எதிர்பார்த் திருந்தார்கள். அவர் கள் மறையும் வரையில் கோபண்ணு பக்கத்து வீடுகளில் விசாரிப்பதுபோல் கின்றுவிட்டு அவர்கள் போனவுடன் தாராளமாய் உள்ளே சென்ருர்,

கோபண்ணு உள்ளே சென்றதும் ரங்கம்மாள் அவ ருக்கு நல்வரவு கூறி ஆசனம் அளித்து உட்காரச் சொல்லிப் போன காரியம் காயா பழமா என்று கேட்டாள். - கோபண்ணு கோபண்ணு போன காரியம் எப்போ தாவது காயாவதுண்டா பழந்தான்.

ரங்கம்மாள்: தொகை சொன்னீரா? ஒத்துக்கொண் டான?

கோபண்ணு: அவ்வளவு அவசரப்பட்டால் காரியம் குடி கெட்டுப் போகுமே. ஒன்றும் அறியாதவனைப்போல் பேசி, பெண் விடு காண்பிக்கச் சொன்னேன். அழைத்துவந்து காட்டினர்கள். இனிமேல் போய்த்தான் மற்றக் காரியங் கள் பேசவேணும்.

ரங்கம்மாள்: இன்னும் தொகை பேசாவிட்டால் பின் அதற்குள்ளாகப் பழம் என்றீரே. அது எப்படி?

கோபண்ணு: தூண்டில் போட்டவனுக்கு முள்மேல் கண் என்பதைப்போல் ருக்மிணி கோவிலுக்கு வந்தது முதல் யார் அவளேக் கவனிக்கிறர்கள் என்று தூர இருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். பையன் சிரிப்பும் விளே யாட்டுமாய் வந்தான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த் ததும் சிரிப்பும் விளையாட்டும் பறந்துவிட்டன. நம து குழக் தையைப் பார்த்தபடி நின்ருனே தவிர வேறு எண்ணமே அவனுக்கு இல்லை. கூட வந்தவர்களெல்லாம் போனபின் அனும் இருவர் ம்ாத்திரம் கின்ருர்கள். நமது பெண் ஆத்துக் குப் புறப்பட்டவுடனே பின்னுடியே அவர்களும் புறப்பட்டார் கள். நானும் பின் தொடர்ந்தேன். பெண் ஆத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/30&oldid=660410" இலிருந்து மீள்விக்கப்பட்டது