454 வேலைசெய்யும் பெண்களை அழைத்து வருகின்றனர். காலை 5 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, இவர்கள் தீப்பெட்டிகளில் குச்சிகளை அடைக்கிறார்கள். பிறகு மீண்டும் பஸ்களில் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். கவர்ச்சிகரமான வண்ணங்களுடன் படங்களை அச்சிடும் லித்தோ அச்சகங்கள் இங்கு ஏற்பட்டு உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளன. இவற்றில் வியாபாரப் பொருள்களின் அடையாள லேபில்களும் சுவரொட்டிகளும் கண்ணைப் பறிக்கும் படங்களுடைய நாட்காட்டிகளும் அச்சிடப்படுகின்றன. பத்து ஆப்செட் இயந்திரங்கள் உள்ள பெரிய அச்சகங் களும் உள்ளன. Graphic Arts Technical Foundation Pittsburg, U.S.A. என்பது போன்ற உலகப்புகழ் பெற்ற கவின்கலை நிறுவனங்களுடன் இணைந்துள்ள லித்தோ அச்சகங்களும் உள்ளன. இவற்றுடன் இவ் வகையில் சிறந்து விளங்கும் காரனேசன் லித்தோ அச்சகம் அச்சுத்துறையில் பல விருதுகளைப் பெற்றிருக் கிறது. இத்தகைய அச்சகங்கள். இறையுருவங்கள், இயற்கைக் காட்சிகள், கட்டிடங்கள், அரசியல் தலைவர் கள் ஆகியோருடைய படங்களைத் தீட்டுவதிலும், அச்சிடு வதிலும் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. அச்சில் படிப்பதற்கேற்றவாறு அழகிய சித்திரங்களைத் தீட்டுவதற்கென கைதேர்ந்த ஓவியர் பலரைத் தாங்களே முழுநேர ஓவியராக நியமித்துக் கொண்டிருக்கின்றன. வீட்டிலிருந்தே சித்திரம் போடுவதைத் தொழிலாக உடையவர்களும் இருக்கிறார்கள். சித்திரத்துக்கு சிவகாசி என்பது பழமொழியாக வழங்கிவருகிறது. போட்டோ ஆப்செட் வகையிலும் 1967க்குப் பிறகு சிவகாசி முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆறு
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/456
Appearance