455 வண்ணங்களை ஒரே நேரத்தில் அச்சிடக்கூடிய இயந்திரங் களும் உள்ளன. இவ்வகையில் இந்தியாவின் பெரும் பான்மையான தேவையைச் சிவகாசி நிறைவேற்றி வருகிறது. உட்படப் பலவகைக் அச்சுத்தொழிலையொட்டி, பளபளப்பான தாள்கள் காகிதங்கள், அச்சுமை, அச்சுக் கருவிகளின் பகுதிகள் ஆகியவற்றின் மொத்தவியாபாரம் இந்நகரில் பெருகியிருக்கிறது. பட்டாசு முதலிய பொருள்களின் உற்பத்தியிலும் இந்நகர் சிறந்துவிளங்குகிறது. இதைப்பற்றி இந்நூலின் முற்பகுதியில் தொழில்கள் என்ற பகுதியில் விரிவாகக் என்ற கூறியிருக்கிறோம். அப்போலோ, ராக்கெட்டு வாணங்களும் சில ஆண்டுகளாகச் செய்யப்படுகின்றன. திரு. அய்யநாடார் முயற்சியால் இங்கு தகரங்களின் மீது வியாபாரப் பெயர்களையும் விளம்பரங்களையும் அச்சிடும் மிகப்பெரிய அச்சகம் ஏற்பட்டிருக்கிறது. பம்பாயில் நிலவும் இவ்வகை அச்சகங்களுடன் போட்டி யிடக்கூடிய வகையில் இத்துறையில் முன்னேற்றம் காண சிவகாசியில் அடிகோலப் பெற்றிருக்கிறது. (Can இயந்திரங்கள் தகரப்புட்டிகள் செய்யும் making machinery) உள்ள தொழிற்சாலைகளும் ஏற் பட்டுள்ளன. பாலிதின் கவர்களில் அடைக்கப்பட்ட மாட்டுத் தீவனம் செய்வதில் சிவகாசி வணிகர் சிலர் ஈடுபட்டிருக் கிறார்கள். மாடுகள், கூடுதலாகப் பால் சுரக்க உதவு மாறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி இந்த உணவுகள் செய்யப்படுகின்றன.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/457
Appearance