456 தொழில் வளர்ச்சியால் இந்திய அரசாங்கத்துக்கு இந்நகரிலிருந்து மிகப்பெரிய தொகை மாதந்தோறும் வரியாகக் கிடைக்கிறது. சென்னையில் நடைபெற்றுவரும் பிராந்திய அச்சுக் கல்லூரியுடன் இணைந்த ஒரு கல்லூரியை இங்கு அமைப்பது பயனுடையதாக இருக்கும். கவின் அச்சுக் கலை என்றநூல் இந்நகரிலிருந்து வெளிவந்திருக்கிறது. சிவகாசி இசைக்குழுவினர் ஆண்டுதோறும் சிவகாசி வழிகாட்டி என்னும் நூலை வெளியிட்டு வருகின்றனர். சிவகாசி முரசு என்ற இதழும் வெளிவருகிறது. திரு கே.சி.ஏ.டி. ஞானகிரி நாடார்,திரு.அய்ய நாடார்,திரு. ஸ்டாண்டர்டு பயர் ஓர்க்ஸ் இராசரத்தின நாடார் ஆகிய பெருமக்களும் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ள பிறதொழில் தலைவர்களும் பலதுறைகளில் இந்நகரின் முன்னேற்றத்திற்கு உதவி வருகின்றனர். இவர்களுடைய முயற்சியால் நாடார் லாட்ஜ் என்னும் வசதியான விடுதி ஏற்பட்டு இந்தியாவெங்குமிருந்து வரும் வணிகர்களுக்குப் பயன்படுகிறது. மாநிலத்தில் வேறு எங்கும் இல்லாத முறையில், வணிகரின் முயற்சி யாலேயே கூட்டுறவுத் தொழிற்பேட்டை ஏற்பட்டிருக் கிறது. தனியார் கொடையால் இயங்கிவரும் கல்லூரி களைப் பற்றி இந்நூலின் பிறிதொரு பகுதியில் தெரி வித்திருக்கிறோம். முன்னோக்கிச் செல்லும் செல்வா கள் வாழும் எடுத்துக்காட்டாக விளங்கும் நகரமென்று சிவகாசியைச் சொல்லலாம். இந்நகரம் 15-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது அதற்குமுன், இங்கு வில்வ மரங்களே இருந்தன.1420 முதல் 1460 வரை தென்காசியிலிருந்து ஆட்சி செய்த அரிகேசரி பராக்கிராம பாண்டியன்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/458
Appearance