உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

457 தென்காசியில் கோவில் கட்ட லிங்கம் கொண்டு வரக் காசிக்குச் சென்று திரும்பிவரும்போது, இங்கு தங்கினான். கோவில் அமைக்கும் நாள் வந்துவிட்ட காரணத்தாலும் தம் தேவி இங்கு பூப்பெய்தியதாலும் அந்த லிங்கத்தை இவ்வூரிலேயே பிரதிட்டை செய்து கோவில் எடுத்தான். அதன் விளைவாக, சிவகாசி என்ற பெயருடன் ஊர் உண்டாயிற்று. வடக்கே வட சாசி, தெற்கே தென் காசி நடுவே சிவகாசி என்ற சொற்றொடரும் ஏற்பட்டது. . சிவன் கோவில் திருவிழா வைகாசி ரோகணியில் தொடங்குகிறது. மாரியம்மன் கோவில் விழா பங்குனி மாதத்தில் நிகழ்கிறது. பத்ரகாளியம்மன் விழா சித்திராப்பவுர்ணமி விழாவாகும். சுப்பிரமணியர் கோவில் பிரம்மோற்சவம் தை மாதம் நடை பெறுகிறது. செண்பகவிநாயகர் தெப்பத்தில் ஆடித்தபசு விழா எடுக்கப்படுகிறது. இவ்விழாக்களுள் பத்ரகாளியம்மனின் சித்திரைத் திருவிழா மிகச் சிறப்பானது. அக்காலத்தில் சிவகாசி நகரம் புதுப்பொலிவும் தனிக் களையும் கொண்டு கல கலப்புடன் காட்சியளிக்கும். வெளியூர் வாழ் சிவகாசி நாடார்கள் குடும்பத்துடன் இங்கு வந்து இவ்விழாவை நடத்தி வைப்பர். நாடார்களின் வீடுகள் அக்காலத்தில் வெள்ளையடிக்கப்படுகின்றன. நாடார்களின் மகமைப் பணத்திலிருந்து இவ்விழா மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. விழாவை யொட்டி 10 நாட் களும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சித்திரை விழாவை யொட்டி 1945 முதல் ஒரு பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நாட் களில், பல ஊர்களிலிருந்து, இந்நகருக்கு கூடுதலான பஸ்கள் விடப்படுகின்றன. இ -29