உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

458 தைப் பிரமோற்சவம் ஒன்பதாம் நாளில் வணிகரும் சிறுதொழில் உரிமையாளரும் உழவரும் தங்களுடைய தொழிற் பொருள்களை, சுப்பிரமணிய சுவாமியின் திரு வுலாவுடன் எடுத்துச் செல்லுகின்றனர். கணக்குரெட்டிபட்டி, அம்மன் கோவில்பட்டி, பரையபட்டி, ராவுத்தர்பாளையம், தெப்பத்துப்பட்டி என்ற ஊர்கள் இணைந்து சிவகாசி நகர் உண்டானதாகக் கூறப்படுகிறது. திருமலை நாயக்கர், தம் பிரதிநிதியாக, அவருடைய இளவல் குமார முத்துவீரப்ப நாயக்கரை 1659-இல் நியமித்தார். இவர் சிவகாசி விசுவநாதா கோவிலை விரிவாக்கி,தெப்ப விழாவும் ஏற்படுத்தினார். நாயக்கர் தெப்பம் என்ற மண்டகப்படி இன்றளவும் நடைபெற்று வருகிறது. கோவிலுக்குள் நாடார்கள் நுழைவதை 1899-இல் மறவர்கள் தடுத்தனர். கலகம் நிகழ்ந்தது. 133 பேர் உயிரிழந்தனர். இதன் விளைவாக ஆயுதந் தாங்கிய படை தங்கும் இடமாகவும் கோட்ட ஆட்சித் தலை நகராகவும் சிவகாசி சிறப்புப் பெற்றது. விருதுநகர்- ஸ்ரீவில்லிபுத்தூர் இரயில் பாதை சிவகாசியை இணைக்கு மாறு சுற்றி வளைத்து அமைக்கப்பட்டது. சிற்றூர் களில் வாழ்ந்த நாடார்கள் கலகங்களுக்கு அஞ்சி, தொகுப்பாக சிவகாசியில் குடியேறினர். சிறு தெருக் களில் சன்னல் இல்லாத வீடுகளை நெருக்கமாகக் கட்டிக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட ஒற்றுமையும் மன உறுதியும் அவர்களுடைய முன்னேற்றத்துக்கும் சிவகாசி யின் வளர்ச்சிக்கும் அடிகோலின. மெழுகுதிரி, வார்ணிஷ், வஜ்ரம், இரும்பு வார்ப்படக் கடசல் வேலைத் தொழிற்சாலைகளும் ஏற்