314 குருவிப்பாறை: வற்றாயிருப்பிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் கான்சாபுரத்திலிருந்து 13 கி.மீ. தொலை விலும் மலைமீது இவ்வூர் இருக்கிறது இப்பகுதியில் யானைகள் ஏராளமாகத் திரிகின்றன. பளிஞர் என்ற மலைச் சாதியார் வாழ்கின்றனர். சிற்றண்ண வாயிலில் (சித்தன்னவாசல்) உள்ள காவற்காரன் படுக்கை போல இங்கு ஒரு பாறை நீட்டிக் கொண்டிருக்கிறது. அதன் கூரைக்குக் கீழ் 150 பேர் இருக்கலாம். பொழுது போக்கு வதற்கு இது உற்ற இடம் ஆகும். இப் பாறையிலிருந்து 30 மீட்டர் தொலைவில் இரண்டு ஆள் உயரத்தில் ஓர் அருவி உளது; இவ்வருவி யில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுகிறது. குன்னூர்: வற்றாயிருப்பிலிருந்து 10 கி.மீ. தொலை வில் இவ்வூர் அமைந்திருக்கிறது. இவ்வூரில் ஆவணக் களரியும் இந்த ஒன்றியத்துக்குரிய அடிப்படைச் சுகாதார நிலையமும் உள்ளன. கிறித்தவர்கள் மிகுதி யாக வாழ்கின்றனர். கூமாப்பட்டி: இவ்வூர் வற்றாயிருப்புக்கு மேற்கே 3கி.மீ.தொலைவில் உள்ளது. மக்கள் தொகை 8.926 ஆகும். பெரும்பாலான மக்கள் முஸ்லிம்கள் ஆவர். பெரிய கண்மாய் ஒன்று இங்கு இருக்கிறது. மலையடிவாரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இருப் பதால், நீர்வளம் மிகுந்த இவ்வூர் ஐப்பசி மாதத்தில் சுவிட்சர்லாந்து போல - ஆனால் அசுத்தமாக இருக்கிறது, மலைமீது காப்பியும் ஏலக்காயும் பயிரிட்டுள்ளனர். இவ் வூரருகே பேச்சிக்கேணி, வெற்றிலைக்கேணி என்னும் இடங்கள் உள்ளன. பேச்சிக்கேணியில் யானையும் புலி யும் மிகுதி.
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/516
Appearance