பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இருந்த பாண்டிய மன்னனை வென்று பதின்மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் பிறிதொரு பான் டியல்ை வீரமரணமடைந்தார். அவர், தமது வாளை உறையினின்றும் எடுத்து வீணர்களின் குருதியைக் கொட்டாமல் இருந்தால், இந்த நாட்டில் இருந்து அஞ்ஞானத்தை அறியாமையை அகற்றி இருக்கமுடி யாது என வரைந்து வைத்துள்ளார். இவரைத்தொடர்ந்து இந்த மாவட்டத்திற்கு கிழக்கு கடற்கரையில் வந்து இறங்கியவர் உலகப்பயணி மார்க்கோபோலோ சீனநாட்டிலிருந்து தமது தாயக மான_போர்ச்சுக்கல் நாடு செல்லும் வழியில் கி. பி. 1293இல் இங்கு வந்தார். இந்தப் பகுதியையும் உள் ளடக்கிய பாண்டிய நாட்டில் பாண்டியர் ஐவர் ஆட்சி புரிந்ததாகவும், தேவிபட்டினம், பெரிய படடினம் துறைமுகங்கள் வழியாக வந்து இறங்கும் அரபு நாட்டு குதிரைகள் பற்றியும், கிழக்கு கடற்குடாவில் ஏப்ரல் மாதத் துவக்கம் மே மாதம் முடிய நடை பெறும் முத்துக்குளித்தல் முறைகள் பற்றியும் அவரது குறிப்புகளில் விவரமாக வரைந்துள்ளார். பின்னர், தில்லிசுல்தான் கில்ஜி முகம்மதுவின் தளபதி குஸ்ருகான் இந்தப் பகுதயில் சூருவளி படையெடுப்பு ஒன்றை கி. பி. 1318 இல் மேற்கொண்டார். அப் பொழுது பெரிய பட்டினத்தில் பிரபலமாக இருந்த சுல்தான் ஸிராஜுதீன் என்ற அரபுநாட்டு தன் வந் தர்து பெருஞ்செல்வத்தை அந்த தளபதி கொள்ளை கொண்டதாகவும், அவரையும் அவரது குடும்பத் தினரையும் சிறைப்படுத்தி கொடுமை செய்ததாக வும், தனவந்தரது அழகு மகளை தனக்கு மனம் செய்து வைக்குமாறு தளபதி நிர்பந்தம் செய்ததால் ஆந்த வணிகர் விஷம் அருந்தி தம்மை மாய்த்துக் கொண்டார் என அந்தப் படையணியுடன் வந்த அமீர் குஸ்ரு என்ற வரலாற்று ஆசிரியர் தம்து நூலில் வரைந்துள்ளார். இன்னெரு உலகப் பயணியான இபுது பதுாதர என்ற மொரோக்கோ நாட்டவர். இலங்கையிலிருந்து மாலத்தீவுகள் செல்லும் பயணத்தில் கப்பல் சேத்