பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o O கான திட்டத்தினல் இந்த ஊர் சேது நாட்டின் நெற் களஞ்சியமாக இன்றுவரை நிலைத்து விளங்கிவருகிறது. கி.பி. 1170இல் பாண்டிய இளவல்களுக்கிடையில்எழுந்த பதவிப் பூசலின் பொழுது பராக்கிரம பாண்டியனை ஆதரித்துப் புறப்பட்டு வந்த இலங்கைப் படைக்கும் குலசேகரனுக்கும் இடையே நடந்த பலபோர்களின் பொழுது இந்தப் பெருங்குளம் பாதிக்கப்பட்டதென் றும், பின்னர் அதனை இலங்கைத் தளபதி தண்ட நாயகன் செம்மை செய்து அமைத்தான் என இலங்கை யின் மகாவம்சம்' கூறுகிறது. சேதுபதிகளின் ஆட்சியின் பொழுது இந்த நீர்த்தேக் கத்தை நன்முக அமைத்து, விவசாயத்திற்குத் தேவை: யான நீரை தேக்கத்திவிருந்து வெளிவிடுதற்கு நாற்பத் தெட்டு மடைவாய்கள் நிர்மாணிக்கப்பட்டன. இதல்ை 'நாரை பறக்காத நாற்பத்தெட்டு பெருமடைக் கண்மாய் என இப்பகுதி மக்கள் பேச்சு வழக்கில் இருப்பது இங்கு நினைவு கூரத்தக்கது. கி. பி. 1710-ஆம் வரை ஆட்சி செய்த விஜயரகுநாத சேதுபதி இங்கு ஒரு கோட்டையும் அமைத்தார். அழி வுற்ற அக்கோட்டையின் கீழ்பகுதி இன்றைக்கும் கீழக் கோட்டை என வழங்கப்பட்டு மறக்குடி மக்களது குடியிருப்பாக இருந்து வருகிறது. செழுமைச் சிறப்பு மிக்க இந்த ஊரைத் தன்மீது தளசிங்க மாலை பாடி வந்த அழகிய சிற்றம்பலக் கவிராயருக்கு திருமலை ரகுநாதசேதுபதி தானமாக வழங்கினர். ஆளுல்ை, என்ன காரணத்தாலோ இக்கிராமத்தை மீ ண் டு ம் .ே ச து ப தி மன்னரிடம் கவிராயர்