பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


Ꮽ ! T ஒப்படைத்தார். அத கன மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு வ ழ ங் கி வி ட் டு, கவிராயருக்கு நாகரத்தின பள்ளம், கொத்தமங்கலம், சேகளுபட்டு, நாரதபள்ளம், பிள்ளையார்பட்டி, மறவனேந்தல் ஆகிய இராமங்களைத் தானமாக வழங்கினர். இந்த சேதுபதி யின் பெயரால் ரகுநாதமடை' என்ற ஒரு மடைவாய் ராஜசிங்கமங்கலம் கண்மாயில் உள்ளது. பதினெட்டாம் நூற்ருண்டின் இறுதியில் வெடித்த இராமநாதபுரம் சீமைப் புரட்சியில் இந்த ஊர் மக்கள் சிறப்பு பங்குகொண்டனர். வெள்ளைப் பரங்கிகளை எதிர்த்து வீர முழக்கமிட்ட முத்துராமலிங்க சேதுபதி, முேத்துக் கருப்பத்தேவர், மருதுபாண்டியர் ஆகியோரது "விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்த ஊர் மக்களும் கிளர்ந்து எழுந்தனர். ... (G96i)صلى الله عليه وسلمے வில்லின் குறியையும், வாளின் வீச்சையும் பரங்கிகளது துப்பாக்கியும் வெடி மருந்தும் அழித்து முறித்தன. மிருகத்தனமான அடக்குமுறையினல் ம க் க ள து கிளர்ச்சி மாய்ந்து மறைந்தது. வீர இளைஞனை குமாரத்தேவன், அவனது நிறையைவிடப் பல மடங்கு பாரமுள்ள இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டான். மற்றுமொரு தலைவரான ஜகந்நாத ஐயர் என்பவருக்கு 1000 கசையடித் தண்டனை வழங்கப்பட்டது. அவரது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரும் அவரது தோழர்களும் திரும்பிவர இயலாத தொலைவிற்கு கடலில் நாடு கடத்தப்பட்டனர். இத் தகைய தண்டனைகளை ஈவு இரக்கமில்லாமல் 1801