முனிவர்களும் இராமனும் ேே 365 நினைந்து பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலுமே தவத்திற்கு உரு என்கிறார் வள்ளுவர். உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. (குறள் 261) என்பது திருவள்ளுவர் வாக்கு. எனவே தவம் செய்வார் துன்பத்தைப் பொறுத்துக்கொள்வர்; சினம் கொண்டு பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யார். தண்டகாரணியம் முதலான கானகங்களில் வாழ்ந்த தவ முனிவர்கள் இராமனுடைய உதவி நாடியதற்கு வள்ளுவர் வழியில் விளக்கம் காணலாம். முனிவர்களுக்கும் இராமனுக்கும் இருந்த தொடர்பு நிலையை அறிந்து கொள்வதற்குக் கம்பனின் அகத்தியப் படலம் ஒரு குறிப்பைத் தருகிறது. தண்டக வனத்துக்கு இராமன் வந்ததைக் கண்ட முனிவர்கள் களிக்கும் சிந்தையர் (2633 ஆயினர். அரக்கர் சினத்துக்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாதவராய் இருந்த அவர்கள் நெருப்பு எரி கானகத்திடையே அமுது அளாவிய புனல் வந்ததால் உயிர் பெற்ற பட்ட மரங்கள்போல் எழுச்சி பெற்றனர் (2534). இவ்வாறு தொடங்கிய கவிச்சக்கரவர்த்தி இராமனுக்கென ஒதுக்கிய சாலைக்கு வந்து சேர்கின்றனர். சற்று ஒய்வுக்குப் பின் மீண்டும் முனிவர்கள் அனைவரும் இராமனிடம் தங்கள் அல்லலைச் சொல்லி முறையிடுவதற்காக வந்தனர் என்கிறான் கவிஞன். 'பல சருக்கங்களில் வான்மீகி கூறிய செய்திகள் அனைத்தையும் தொகுத்தும் சுருக்கியும் 'அகத்தியப் படலம்' என ஒரே படலமாகக் கம்பன் பாடியுள்ளான். 59 பாடல்கள் கொண்ட இப் படலத்தில் பாதி கழிந்தபின்தான் அகத்தியன் பற்றிய குறிப்பே வருகிறது. மேற்போக்காகப் பார்த்தால் படலப் பெயர் பொருந்தாதுபோல் தோன்றும். ஆனால், முனிவர்களில் பல வகையினரைக் குறிப்பதோடு அகத்தியனுக்குத் தனிச் சிறப்புத் தருவதை ஆழச் சிந்தித்தால் பெயர்ப் பொருத்தம் விளங்கும். தவத்துளர் (2633), தவம் முற்றினார் (2660) என்று பிற முனிவர்களைக் குறிக்கும் கவிஞன் துண்டமதி வைத்தவனை ஒத்தமுனி (2681) என்று அகத்தியனைக் குறிப்பிடுவதைக் கருதிப் பார்க்க வேண்டும். r
பக்கம்:இராமன் பன்முக நோக்கில்.pdf/386
Appearance