பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|-14 இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம் செல்லும் வழியில் பாம்பன் ஆறு குறுக்கிட்டது போல என ஒரு பழமொழி வழக்கில் உள்ளது. மண்டபம் கடற்கரையிலிருந்து எதிர்க் கரையான பாம்பனுக்கும் இடையில் சுமார் 2 கல் தொலைவில் கடல்நீர் சூழ்ந்து இருப்பது தான் இதற்குக் காரணமாகும். பாம்பன் என்ற பெயர் பிற்காலத்தில் போர்ச்சுக்கிசி யரால் ஏற்படுத்தப்பட்ட பெயராக கருதப்படுகிறது. கி.பி.17ஆம் நூற்றாண்டில் இலங்கையில் இருந்து பெரும் படை ஒன்று இராமேஸ்வரத்தில் கரை இறங்கி முன்னேறிச் சென்றபோது இன்றைய பாம்பனை அடுத்த குத்துக்காலை மட்டும் தான் வரலாறு குறிப்பிடுகிறது. ஆனால் பிற்கால வரலாற்றில் கி.பி. 1640ல் இராமேஸ்வரம் மீது மதுரை திருமலை நாயக்கர் மன்னர் மேற்கொண்ட படையெடுப்பிற்கு ஆதரவாக அவர் உடன்பாடு ஒன்றில் குறித்துள்ளபடி இந்தப் பெயர் பம்பா என வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கி.பி. 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயரது கோடைக்கால குடியிருப்பாக மாறும்வரை பாம்பன் ஆங்கிலேயருக்கு இதமான கால நிலையை உடைய கோடைகால இருப்பிடமாக இருந்து வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்குக் கோட்டை ஒன்றும் அதனை அடுத்து சேதுப் பயணியரது பயன்பாட்டுக்கென ஒரு சத்திரமும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் இடிபாடுகள் இன்னும் காணத்தக்கதாக உள்ளன. மன்னர் பாஸ்கர சேதுபதியின் பெருமுயற்சியினால் அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் 11.9.1893-இல் கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பும் வழியில் இங்குதான் 22.1.1897இல் கரையிறங்கிய பெருமை இந்தத் துறைமுகத்திற்கு உண்டு.