பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"[], இராமர் செய்த கோயில் கன்னியாகுமரி செல்லும் வழியில் சென்னைக்கு வந்த அந்த இளம் துறவியை இராமநாதபுரம் இளம் மன்னர் பாஸ்கர சேதுபதியவர்கள் சந்தித்து மகிழ்ந்ததுடன் சுவாமிகளிடம் வேண்டுகோள் ஒன்றினையும் சமர்ப்பித்தார். எதிர்வரும் 191893ல் அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் உலகத்தின் அனைத்துச் சமயங்களின் வல்லுனர்கள் கலந்து கொள்ளும் மாநாடு ஒன்று நடக்க இருப்பதையும் இந்திய நாட்டின் ஏகப்பிரதிநிதியாக சுவாமிகள் அதில் கலந்து கொண்டு நமது நாட்டின் சமயம் பண்பாடு, தத்துவங்கள் ஆகியவை பற்றிய சொற்பொழிவினை ஆங்கில மொழியில் நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டார். சுவாமிகளும் தமது தலயாத்திரையை கன்னியாகுமரியில் முடித்துவிட்டுத் திரும்பிய பிறகு மன்னரது வேண்டுகோளுக்கு இணக்கம் தெரிவித்தார். மகிழ்ச்சியுற்ற மன்னா அமெரிக்க நாட்டிற்குச் சுவாமிகள் சென்ற வர பயன ஏற்பாடுகளையும் தமது சொந்தச் செலவில் செய்தார். சுவாமிகளும் அன்று பம்பாய் துறைமுகத்திலிருந்து கப்பலில் அமெரிக்க நாட்டிற்குப் பயணமானார். இந்தப் பயணம் சுவாமிகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தி னையும் புகழினையும் பெற்றுத்தந்ததுடன் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அமெரிக்கா, கனடா, பிரிட்டன். பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மக்களுக்கு நமது நாட்டின் தத்துவச் சிறப்பினை எடுத்துச் சொல்லும் வாய்ப்பினை வழங்கியதுடன் ஆங்காங்கு அவரது குருவான பூரீ இராமகிருஷ்ணரது பெயரில் பல திருமடங்களை நிறுவக் கூடிய வாய்ப்பையும் அளித்தது. பிரான்ஸ் நாட்டில் இருந்த ரொமைன் ரோலண்டு என்ற அறிஞரும் இங்கிலாந்து நாட்டுப் பெருமாட்டி ஒருவரும் சுவாமிகளது சிறந்த சிடர்களானர்கள் (இந்தப் பெண்மணி பின்னர் அருட் சகோதரி நிவேதிதா என்ற பெயருடன் கல்கத்தா ஆசிரமத்தில் வந்து கடைசி வரை அங்கேயே வாழ்ந்து வந்தார்)