பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 27 ஆனந்த இராமாயணம் இந்த நூல் வடமொழியில் இயற்றப்பட்டு உள்ளது. இதன் காலம் இயற்றிய புலவர் போன்ற விவரங்கள் அறியத்தக்கதாக இல்லை. இந்த நூல் சென்னை மயிலாப்பூர் பூரீ ராமகிருஷ்ண மடத்தினரால் தமிழாக்கம் செய்யப்பெற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியினை மேற்கொண்டவர் வரகவி. அ. சுப்பிரமணிய பாரதி என்பவர். பதிப்புரையில் இந்த நூல் ஆதி இராமாயண கர்த்தாவான வால்மீகி முனிவரால் இயற்றப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வால்மீகியின் இராமாயண காவியத்தின் கதை அமைப்பு. நிகழ்ச்சிகள் ஆகியன முற்றிலும் வேறுபட்டனவாக உள்ளன. இந்த இலக்கியத்தின் எந்தப் பகுதியிலும் பூரீ ராமபிரான் இராவண சம்ஹாரத்திற்குப் பின்னர் சிதாப் பிராட்டியுடன் இராமேசுவரம் வந்ததாகவோ அல்லது அந்தக் கடற்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததாகவோ காணப்படவில்லை. மேலும் பூரீ ராம பிராமன் வானரச் சேனையுடன் கடலில் சேதுவை அமைப்பதற்கு முன்னர் கடற்கரையில் மகாதேவரை வழிபட்டு தமது முயற்சிக்கு அருள் பாலிக்க வேண்டிக் கொண்டதாக மட்டும் இதில் பாடப்பட்டுள்ளது. அத்யந்த இராமாயணம் வடமொழியில் இயற்றப்பட்ட இந்த நூ லும் சென்னையைச் சேர்ந்த ஹரினி என்பவர் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூலும் இராமாயணம் எனக் குறிப்பிடப்பட்டாலும் மேலே குறிப்பிட்ட ஆனந்த இராமாயணம் போன்று வால்மீகியின் இராமாயண காவியத்திற்கு முற்றிலும் வேறுபட்டதாகப் பாடப்பெற்றுள்ளது. இலங்கையிலிருந்து சிதையுடன் அயோத்தி திரும்பிய பூரீ ராம