பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Հւկ இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம் திருக்கோவில் பற்றி ஆங்கில நாட்டுக் கட்டடக்கலை வல்லுநரும், வரலாற்று அறிஞருமான ஜேம்ஸ் பெர் கூசன் என்பவர் வரைந்த குறிப்புகள் இங்கு கொடுக்கப்படுகிறது. இவர் கி.பி.1875-ல் இராமேஸ்வரம் திருக்கோவிலுக்கு வருகை தந்து இந்தக் கோயிலின் கட்டுமான அமைப்பு. கோபுரங்களின் அமைப்பு. சிலைகள். கல்வெட்டுகள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து தமது கருத்தினை ஒரு நூலில் பதிவு செய்துள்ளார்.' அந்தப் பகுதியின் தமிழாக்கம் தான் இந்தக் குறிப்புகள். இவைகளில் சேதுபதி மன்னரது ஆட்சிக்காலம். பெயர்கள் முதலியன தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றாலும் இவரது குறிப்புகள் இராமேஸ்வரம் திருக்கோயிலின் வரலாற்றை அறிவதற்கு மிகவும் பொருத்தமானவை. அந்தக் குறிப்புகள் வருமாறு : ங்ங்


அழகான மிக நேர்த்தியான கட்டமைப்பும். எந்தக் குறையும் கூற முடியாத மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட திட்டத்துடன் திராவிடக் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பெருமை இராமேஸ்வரம் திருக்கோவிலைச் சாரும்.

வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத அளவு மிகச் சிறப்பான கட்டடக் கலையை இங்கு மட்டும் தான் காண முடியும். தஞ்சைக் கோயிலுடன் இந்தத் திருக்கோயிலை ஒப்பிடுகையில் இக்கோயில் பத்து மடங்கு மிகப் பெரியதாக துணுக்கமாக. அழகான கட்டிடக் கலையுடன் கூடியது . இக்கோயிலின் ஒவ்வொரு பகுதியும் உள்பக்கத் தோற்றத்திலும் வெளிப்பக்கத் தோற்றத்திலும் வெவ்வேறு விதமான உணர்வுகளைத் 1. James Ferguson : History of India and the great eastern architechers1876 - Page 382 - 388