பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 69 கூத்தன் சேதுபதியினால் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என நம்பப்படுகிறது. இந்தத் திருக்கோவில் கட்டுமானங்கள் கால நீட்சியாலும். கடலிலிருந்து வீசுகின்ற உப்பங் காற்றினாலும் சிதிலமடைந்து வந்துள்ளன. முதலாவது பிரகாரமும், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததால் இங்கே தங்களது திருப்பணிகளை நகரத்தார்கள் தொடங்கினார்கள். இந்தத் திருப்பணியை முன்னின்று நடத்தியவர்கள் தேவகோட்டை ஜமீன்தார் என வழங்கப்பட்டு வந்த தேவகோட்டை க.அழ.அரு.ஏ.எல்.ஏ.ஆர். குடும்பத்தினர் ஆவர். 19-ம் நூற்றாண்டில் தேவகோட்டை நகரத்தார்களில் செல்வபலத்திலும், சிவ பக்தியிலும் சிறந்து விளங்கியவர்கள் இந்தக் குடும்பத்தினர். அப்போது சேது நாட்டின் மன்னராயிருந்த இளைஞர் பாஸ்கர சேதுபதிக்கும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இராமசாமி .ெ யாருக்கும் ஏற்பட்ட அசாதாரண தொடர்புகள் நாள ைவில் மிக சிறந்த நட்பிற்கு இலக்கணமாகவும் அமைந்துவ து மிக சிறந்த வள்ளலாக விளங்கிய பாஸ்கர சேதுபதி மண் வருக்குப் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும் புதெல்லா சென்னை பவளக்காரத் தெருவில் இருந்த பசாமி செட்டியாரது வணிக நிலையம் கைகொடுத்து வந்தது. மேலும் இந்தத் தொடர்புகள் நன்கு வலுப்பெற்ற குடும்ப உறவுகளாக மாறின. மன்னரது கி.பி.1893-ம் ஆண்டு நாட் குறிப்புகளில் இராமசாமி செட்டியார் அவர்களைப் பற்றியும். அவரது மாளிகையில் நடைபெற்ற பியானோ இசை நிகழ்ச்சி ஒன்றையும் மன்னர் அவர்கள் குறிப்பிட்டு வரைந்துள்ளார். மேலும் இராமநாதபுரம் சிமையின் வடகிழக்குப் பகுதியான இறவிசேரி மாகாணத்தை இராமநாதபுரம் சமஸ்தானத்தின் குத்தகைதாரராக சில காலம் செட்டியார் அவர்கள் நிர்வகித்து வந்ததால் நகரத்தார்களுக்கிடையே அவர்களுக்கு ஜமீன்தார் என்ற பட்டம் கிடைக்கப் பெற்றது. பிற் காலத்தில் கானாடு காத்தான் மற்றும் நான்கு ஊர்களைக்