பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壽 88 蒙 இராமலிங்க அடிகள் பம் (56) மருட்கை விண்ணப்பம் (57), கொடைமட விண்ணப்பம் (58) என்று ஒரே விண்ணப்பங்கள் மயத்தான் ஒற்றியூரான்மீது. 51. சிவானந்தப் பத்து பத்துப் பாடல்கள் அமைந்த இப்பதிகம் திருவொற்றியூர்த் தேனையும் தில்லை ஓங் கிய சிவானந்தத் தேனையும் விளித்து முறையிடுவதாக அமைந்தது. பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இச்சை உண்டெனக் குன்திரு மலர்த்தாள். எய்தும் வண்ணம்.இங் கென்செய வல்லேன் கொச்சை நெஞ்சம்என் குறிப்பின்நில்லாது குதிப்பில் நின்றது. மதிப்பின்இவ் வுலகில் பிச்சை உண்டெனில் பிச்சரில் சிறும் - -- பேய ருண்மனை நாயென உழைத்தேன் செச்சை மேனிஎம் திருவொற்றி அரசே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே (1) பேதை நெஞ்சினேன் செய்பிழை எல்லாம் பேசி னால்பெரும் பிணக்கினுக் கிடமாம் தாதை நீஅவை எண்ணலை எளியேன் தனக்கு நின்திருத் தண்அளி புரிவாய் கோதை நீக்கிய முனிவர்கள் காணக் - கூத்து கந்தருள் குணப்பெருங் குன்றே தீதை நீக்கிய ஒற்றிஎம் பெருமான் தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே (6) எளிய னேன்.பிழை இயற்றிய எல்லாம். எண்ணி னுட்பட வேனும்மற் றவையை அளிய நல்லருள் ஈந்திடும் பொருட்டால் ஆய்தல் நன்றல ஆதலின் ஈண்டே களிய நெஞ்சமாம் கருங்கலைக் கரைத்துக் கருணை ஈகுதல் கடன்உனக் கையா தெளிய ஓங்கிய ஒற்றிஎன் அமுதே . தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே (9)