பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகங்காரம் என்பது அவர்கள் பெயர். மூன்றாவது மனைவி 'காமியம்'. அவளுக்கு மூன்று பிள்ளைகள். அவர்கள் பெயர் சத்துவம், இராசசம், தாமசம் என்பது. இந்த மூன்று மனைவிகளோ டும், எட்டுப் பிள்ளைகளோடும் ஏழையாகிய நான், ஒன்பது ஓட்டைகள் உள்ள ஒரு வாடகை வீட்டில் வாழ்கிறேன். இந்த வீட்டின் உரிமையாளர்கள் மூவர். வாதம், பித்தம், கபம் என்ற பெயர் கொண்ட அவர்களுக்கு நான் தினந்தோறும் மூன்றுமுறை வாடகை கொடுக்க வேண்டும். சற்றே தவறினால் அவர்கள் துன்புறுத்துவர். எனவே, என்னால் திருமணத்திற்கு வர இயலவில்லை.

உருவகக் கதை (Allegory) எழுதுவதிலும் வள்ளலார் வல்லவ ராகக் காணப்படுகிறார். இந்த முத்துசாமி முதலியார் திருஅருட்பா அச்சில் வருவதற் கும் காரணமாக இருந்திருக்கிறார். தொழுவூர் வேலாயுத முதலி யார் எழுதிய, "திருஅருட்பா வரலாறு" என்னும் நூலில் 45வது பாடலில், "ஓங்கருளான் முத்துசாமிப் பெயரின் ஓர் உரவன்" திருவொற்றியூர் சன்னிதி முன்னர் அருட்பாக்களை ஓதி ‘பக்தி வித்தினன்' என்று கூறுகிறார். இப்படிப் பலவகையிலும் வள்ளலாருடனும், திருஅருட்பாவு டனும் தொடர்பு கொண்டிருந்த, திருமழிசை முத்துசாமி முதலியார் தாம் என்னுடைய தாய்வழி முப்பாட்டனார். அவரைப்பற்றியும், அவர் வீட்டிற்கு அருகில் வாழ்ந்த 'இராமலிங்கப் பரதேசி' பற்றி யும் எனது தாயார் கூறக் கேட்டிருக்கிறேன் (பரதேசி என்பது அந்தக் காலத்தில் மிக உயர்ந்த சொல்லாகக் கருதப்பட்டது). எனது தாயார் தேவாரம், திருவாசகம், திருஅருட்பா பாடல்களை இனிமையாக இசையுடன் பாடக்கூடியவர். எனது இளம் பிராயத் தில் எனக்கும் கற்பிக்க முயன்றார். எனது தவக்குறையினால் அந்தத் திறமை எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சைவத்தி லும், சன்மார்க்கத்திலும் ஆழ்ந்த பக்தி, உள்ளத்தில் ஆழமாகப் பதிந்தது.