பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篆 98 家 இராமலிங்க அடிகள் 77. திருவுலாப் பேறு. ஒற்றியூர் எம்பெருமான் திருவுலா மேற்கொள்ளும் போது அதனைக் கண்ணுற்ற தலைவியொருத்தி தன் தோழியிடம் தன் அநுபவத்தை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது இப்பதிகம். அறு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாபபில் அமைந்த பத்துப் பாடல்களைக் கொண்டது. சீரார் வளஞ்சேர் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிதனை ஊரார் உடன்சென் றெனது நெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன்காண் வாரார் முலைகண் மலைகளென. வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால் ஏரார் குழலாய் என்னடிநான் - இச்சை மயமாய் நின்றதுவே (1) சேயை அருளும் திருஒற்றித் தியாகப் பெருமான் வீதிதனில் தூய பவனி வரக்கண்டேன் சூழ்ந்த மகளிர் தமைக்கானேன் தாயை மறந்தேன் அன்றியும்என் தனையும் மறந்தேன் தலைப்பட்டேன் ஏயென் தோழி என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே (6) தேடார்க் கரியான் ஒற்றிநகர்த் தியாகப் பெருமான் பவனிவரத் தோடார் பனைத்தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி வாடாக் காதல் கொண்டறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன் 3. அடிகளே தம்மைத் தலைவியாகப் பாவித்துக் கொண்டு பேசுவதாகக் கருத லாம். அகத்துறைப் பதிகம் இது. -