பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் திருமுறைப் பாடல்கள் 影 99 举 ஏடார் கோதை என்னடிநான் இச்சை மயமாய் நின்றதுவே (9) அகப்பொருள் துறையில் அமைந்து ஆழ்வார் களின் மகள் பாசுரம் போல் அடிகளாரின் மகள் நிலைப் பாசுரமும் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின் றது. நாமே மகளாய் விடும் உணர்வைப் பெறுகின் றோம். நம்மையும் மறந்த நிலை எய்துகின்றோம். 78. நாரையும் கிளியும் நாட்டுறு தூது: ஒற்றியூர் இறைவன் பவனி வரும்போது அவனைக் கண்டு அவன்மீது மையலுற்ற தலைவி நாரையையும் கிளியை யும் அவன்பால் தூதனுப்புவதாக அமைந்தது. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத் துப் பாடல்களைக் கொண்டது இப்பதிகம். கண்ணன் நெடுநாள் மண்ணிடத்தும் காணக் கிடையாக் கழலுடையார் தண்ணும் ஒற்றி நகரார்க்கு நாரார் சென்று நவிற்றாயோ அண்ணல் உமது பவனிகண்ட அன்று முதலாய் இன்றளவும் உண்ணும் உணவோடு உறக்கமுநீத்த துற்றாள் என்றில் வொருமொழியே (1) மாய மொழியார்க் கறிவளியார் வண்கை உடையார் மறைமணக்கும் துரய மொழியார் ஒற்றியிற்போய்ச் சகங்காள் நின்று சொல்லரோ நேய மொழியாள் பந்தாடாள் நில்லாள் வாச நீராடாள் ஏய மொழியாள் பாலனமும் ஏலாள் உம்மை எண்ணிஎன்றே (4) (சுகங்கள் - கிளிகள்)