பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豪 128 矮、 இராமலிங்க அடிகள் நோக்கரிய நோக்கழகும் நோக்கார் நுதலழகும் போக்கரிய நன்னுதலில் பொட்டழகும் - தேக்குதிரி புண்டரத்தின் நல்லழகும் பொன்னருள்தான் கண்டவர்பால் ஊற்றுகின்ற கண்ணழகும் - தொண்டர்கள்தம் நேசித்த நெஞ்சமலர் நீடு மனமுகந்த -- நாசித் திருக்குமிழின் நல்லழகும் - (208-212) என்ற கண்களில் அழகு கொப்பளிப்பதைக் காணலாம். இன்னும் அடிகள் நெஞ்சுக்குரைப்பவை: நற்றுணையென் றேத்துமந்த நாவரசர்க் கன்றுகடற் கற்றுனையோர் தெப்பமெனக் காட்டியதை - இற்றெனநீ மாவுலகில் கேட்டும் வணங்குகிலாய் அன்படையப் பூவுலகர்க் கீதொன்றும் போதாதோ (247-248) என்பவற்றில் நாவரசர் வரலாற்றுக் குறிப்பு நவிலப் பெற்றுள்ளது. மேலும், பாரறியாத் தாயாகிப் பன்றிக் குருளைகட்கு - ஊரறிய நன்முலைப்பால் ஊட்டியதைச் சீரறிவோர் சொல்லிநின்றார் கேட்டும். துதிக்கின்றிலையன்பு புல்லஎன்றால் யாதொன்றும் போதாதோ (253-254) என்பவற்றில் பன்றிக் குட்டிகட்கு முலையூட்டிய பர மன் திருவிளையாடல் காட்டப் பெறுகின்றது. இன்னும் மாதர் வலைப்பட்டதைக் கூறி நெஞ்சைத் தெருட்டுகின்றார்.