பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

激 142 案 இராமலிங்க அடிகள் தேனேறு மலர்ச்சடைஎஞ் சிவனே தில்லைச் செழுஞ்சுடரே ஆனந்தத் தெய்வ மேஎன் ஊனேறும் உயிர்க்குள்நிறை ஒளியே எல்லாம் உடையானே நின்னடிச்சி உன்னி அன்பர் வானேறு நின்றார்நான் ஒருவன் பாவி மண்னேறி மயக்கேறி வருந்துற் றேனே (70) அன்னையினும் பெரிதினிய கருனை ஊட்டும் ஆரமுதே என்.உறவே அரசே இந்த - மண்ணுலகில் ஆடியேனை என்னே துன்ப வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன் என்னைஉளங் கொள்ளிதியோ கொள்கி லாயோ என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே (72) மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை மயலேறி விருப்பேறி மதத்தி னோடு பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ பேயேறி நலிகின்ற பேதை யானேன் வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல் மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார் ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள் உடையானே இதுதகுமோ உணர்கி லேனே (74) மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம் வல்ல.அருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக் கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும் கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப் பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன் துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ இன்றேனிலிப் பாவியேன் சொல்வ தென்னே (75)