பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் திருமுறைப் பாடல்கள் 常 167 笨 வஞ்சரையான் கானா வகைவதைத்தான் ஓர்அரையோ டஞ்சரையான் கண்கள் அவை, (1) உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை வெள்ளம்,உண் டிரவு பகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும் விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே, (4) நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான் என அறிந்துநான் தானாம் பேதமும் கடந்த மெளனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும் வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே. (5) சச்சிதா னந்த வடிவம்நம் வடிவம் தரும்அதிட் டானம்மற் றிரண்டும் பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல் மெய்ச்சிதாம் வீடென்றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே. (6) கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும் ஈனவஞ் சகநெஞ் சகம்புலை யேனை என்றுகொண் டருளும்நாள் உளதோ