பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笨 4 冰 இராமலிங்க அடிகள் லாயினர். இப்போதுதான் தெய்வமணி மாலை'யும், “கந்தர் சரணப்பத்தும் அடிகளால் பாடப்பெற்றன. 'திரு வருட்பாவில் முதன் முதலாகப் பாடப் பெற்றவை இவையேயாகும். 'ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற (தெய்.மாலை-8) என்ற பாடல் பிள் ளைப் பெருமான் எவ்வெவற்றை முருகனிடம் வேண்டி னார் என்பதைக் காட்டும். அடிகளால் பாடப் பெற்ற முருகன் சந்நிதியும் விரைவாக வளர்ந்து இன்றைய நிலை எய்திற்று என்பது ஒர் உண்மை. . . . . . . . (6) மேன்மாடியில் நிலைக் கண்ணாடி இருந்த அறையை மூடிக் கொண்டு முருக உபாசனை செய்து வந்தார். அண்ணனுக்கும் அண்ணியாருக்கும் பிள்ளைப் பெருமான் என்ன செய்கின்றான் என்பதை அறியக் கூடவில்லை. ஒருநாள் முருகப் பெருமான் கண்ணாடி யில் காட்சி நல்கினான். கண்டறியாதன கண்டார் அடி

  • S@YY。

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பம் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட் கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே. - 3. பிரார்த்தனை மாலை - 1 என்ற பாடலில் திருத்தணிகைப் பெருமான் நம் பிள் ளைப் பெருமானுக்குக் காட்சித் தந்தது அகச்சான்றாக அமைகின்றது. - - (7) ஒதாதுணர்ந்தவர்கள் சிலர். இவர்தம் ஆசிரியர் காஞ்சி சபாபதி முதலியார். இவரது அறிவுத் தரத்தையும்