பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露 2f2 苓 இராமலிங்க அடிகள் அப்பாதின் திருவருட்பேர் அமுதருமை அறியேன் அன்றிரவின் மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து இப்பாரில் எனைஅழைத்து வலியவும்என் கரத்தே இனிதளித்த பெருங்கருணை இன்பமென்றன் மனமும் துப்பாய கண்களும்விட் டகலாதே இன்னும் தோன்றுகின்ற தாயினும்இத் துட்டநெஞ்சம் உருகா எப்பாவி நெஞ்சுமிதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே (9) "அழுதால் உன்னைப் பெறலாமே என்ற மணிவாசகர் கருத்திற்கொப்ப இப்பாடல்களைக் கண்ணிர் விட்டு அழுது அழுது அநுபவித்தால் வள்ளற் பெருமான் அநுபவத்தை எட்டிப் பிடிக்கலாம். பாடல்களில் அவர் தம் நேரிய அநுபவம் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு மகிழலாம். - 6. செளந்தர மாலை: இறைவன் அழகன். அவனது அழகில் சொக்கி அநுபவித்த அழகைப் பன்னிரண்டு பாடல்களில் வடித்துக் காட்டுகின்றார் அடிகள். பாடல் கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. இவற்றுள் ஈண்டு நான்கு பாடல் களில் நாம் ஆழங்கால் படலாம். சேலோடும் இணைந்தவிழிச் செல்விபெருந் தேவி சிவகாம வல்லியொடு சிவபோக வடிவாய் மேலொடு கீழ்நடுவும் கடந்தோங்கு வெளியில் விளங்கியநின் திருவுருவை உளங்கொளும்போ தெல்லாம் பாலோடு பழம்பிழிந்து தேன்கலந்து பாகும் பசுநெய்யும் கூட்டிஉண்ட படிஇருப்ப தென்றால் மாலோடு காண்கின்ற கண்களுக்கங் கிருந்த வண்ணம்.இந்த வண்ணம்என எண்ணவும்.ஒண் ணாதே (1) சித்தியெலாம் அளித்தசிவ சத்திஎனை யுடையாள் சிவகாம வல்லியொடு சிவஞானப் பொதுவில்