பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் 崇 275 缘 செய்யானைக் கரியானைப் பசுமை யானைத் திகழ்ந்திடுபொன் மையினானை வெண்மை யானை மெய்யானைப் பொய்யானை மெய்பொய் இல்லா வெளியானை ஒளியானை விளம்பு வார்க்குக் கையானை என்னையெடுத் தனைத்துக் கொண்ட கையானை என்னைஎன்றும் கையா தானை எய்யானை எவ்வுலகும் ஏத்த என்னை ஈன்றானைக் கண்டுகளித் திருக்கின் றேனே. (6) ஆன்றானை அறிவனை அழிவி லானை அருட்பெருஞ்சோதியினானை அலர்ந்த சோதி மூன்றானை இரண்டானை ஒன்றா னானை முன்னானைப் பின்னானை மூட நெஞ்சில் தோன்றானைத் துயருளே தோன்றி னானைச் சுத்தசிவ சன்மர்க்கந் துலங்க என்னை ான்றானை எல்லாமாய் அல்லா தானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (8) நன்றானை மன்றகத்தே நடிக்கின்றானை நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி நின்றானைப் பொன்றாத நிலையி னானை நிலையறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம் ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல் என்றானை என்றும்உள இயற்கை யானை எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே (10) பாடல்களின் ஒசைநயம் உள்ளத்தைக் கவர்கின் றது. பொருள் நயமும் சிந்தையைக் களிப்பிக்கின்றது. 45. கண்கொள்ளாக் காட்சி: இப்பதிகமும் காட்சியைக் கூறுவது. பத்துப் பாடல்களைக் கொண்ட இப் பதிகமும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்து எல்லாப் பாடல்களும் "எம்மானக் கண்டு களித்திருக்கின் றேனே" என்று இறுவனவாகும்.