பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே காணாத காட்சிஎலாம் கண்டுகொள்ளல் ஆமே (3) கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீனே உண்டதெலாம் மலமே உட் கொண்டதெலாம் குறையே உலகியலர் இதுவரையும் உண்மையறிந் திவிரே விண்டதனால் என்இனிநீர் - சமரசசன் மார்க்க மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின் இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே. (4) தீமையெலாம் நன்மைஎன்றே திருவுளங்கொண் டருளிச் சிறியேனுக் கருளமுதம் தெளிவளித்த திறத்தை ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அநுபவமே மயமாய் அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்சோதியைஓர் ஓமயவான் வடிவுடையார் - உள்ளகத்தே நிறைந்த ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை 崇 315 篆