பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 镰 21 霹 நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப." என்பது தொல்காப்பியம். அடிகள் நிறைமொழி மாந்தர். அவர்களது ஆணையிற்கிளந்தது இம்மறைமொழி. ஆகவே, இது மந்திரம். இவ்வாறு ஆணையிட்டுக் கூறும் வழக்கம் அடிக வரிடத்துப் பெருவழக்காகக் காணப் பெறுகின்றது. இது ஞானசம்பந்தப் பெருமானிடமிருந்து அடிகட்கு அமைந் திருத்தல் வேண்டும். இரண்டு எடுத்துக்காட்டுகள் தரு வேன். ( ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன் கோணைநிலத் தவர்பேசக் கேட்பதுபோல் இன்னும் குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன் ஊணைஉறக் கத்தையும்.நான் விடுகின்றேன் நீதான் உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட்டிடுவேன் மானைமணிப் பொதுநடஞ்செய் வள்ளல்நீ எனது மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே, - 6. பிரியேன் என்றல் - 2 என்பது ஒன்று. இது அடிகள் இறைவன்மீது ஆணை யிட்டு விண்ணப்பித்தது. ti) ஆனை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை அருள்.ஒரு தருகின்றோம் - கோனை மாநிலத் தவரெலாம் நின்னையே குறிக் கொள்வர் நினக் கே.எம் 8. தொல்,பொருள்.செய்யு - 176. 9. சம்பந்தர் நான்கு இடங்களில் ஆணைநமதே என ஆணையிட்டுரைக்கின்ற னர். 1.84:11, 1.85:11, 3,78:11, 311.8:1 என்பனவற்றில் பாடல்கள் இவ்வாறு இறுகின்றன.