பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

泰 34 案 இராமலிங்க அடிகள் ( கடலூரில் நோயுற்ற ஐயாசாமிப் பிள்ளைக்குத் திருநீறிட்டு இருந்த அடிகள் அதே சமயம் வடலூரில் சாலையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். - - (i) ஒருமுறை அடிகள் திருவதிகைக்கு வழிபடச் சென்றபோது கூட்டம் அதிகமாகி நெருக்கடி நேர்ந்தது. அப்போது அடிகள் பல இடங்களிலும் தோன்றிக் காட்சியளித்தார். () ஒருநாள் அடிகள் உலாவப் போந்தபோது பலர் உடன் சென்றனர். அவர்களை இருங்கள்’ என்று கூறி நடந்தனர். அதன் பின்னரும் அவர்கள் திடீரென்று பின் தொடரவே அடிகள் தொலைவில் காணப்பட்டார். தொடர்ந்தவர்கள் ஒடி நெருங்க மேலும் தொலைவில் அவர்கள் பெருமானைக் காணலாயினர். கருங்குழியி லும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. (v) மரம் வாங்குவதற்காக ஆறுமுக முதலியார் என்ற ஒர் அன்பர் சென்னை சென்றபோதும் அடிகள வடலூரில் இருந்தவாறே சென்னையிலும் அவருக்கு உதவினர். (4) அடிகளின் திருக்கரம் அமுதசுரபி ஆதல் தரும சாலையில் ஒரு நாள் இரவு நேரத்தில் பலர் வந்துவிட்ட னர். அடிகள் தம் கையால் உணவு பரிமாறினர். அனை வர் உண்ட பின்னும் உணவு எஞ்சி இருந்தது. (5) தருமசாலையில் ஒரு சமயம் அரிசி தட்டுப்பாடு நேர்ந்ததை அன்பர்கள் அடிகளிடம் விண்ணப்பித்தனர். அடிகள் சிறிது நேரம் தியானம் செய்து நாளைக்கு அரிசி வரும்’ என்றனர். அவ்வாறே மறுநாள் திருத்துறையூரி லிருந்து மூன்று வண்டி அரிசியும் பிற உணவுப் பொருள்களும் வந்து சேர்ந்தன. வந்த அன்பர் முதல் நாள் இரவில் கனவில் உத்தரவானதாகக் கூறிச் சென்றார்.