பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 泰 35 等 (6) திரைமறைவில் தில்லை தரிசனம்: ஆண்டு தோறும் ஆணித் திருமஞ்சனத்திற்கும் திருவாதிரைத் திருவிழாவிற்கும் வெளியூர் அன்பர்கள் வடலூர் வந்து அடிகளை இட்டுக் கொண்டு சிதம்பரம் செல்வது வழக் கம். ஒராண்டு அவ்வாறு செல்லஇயலவில்லை. அடி யார்களின் வருத்தத்தை உணர்ந்த அடிகள் தருமசாலை யின் ஒரு பகுதியில் திரையிடச் செய்து அத்திரைக்குள் சென்று பார்க்கக் கூறினர். திரைக்குள் சென்றவர்கள் தில்லைத் தரிசனத்தைக் கண்டு களித்தனர். வள்ளல் பெருமான் வடலூரை உத்தர ஞான சிதம்பரமாக்கியவ ரன்றோ. - (7) மழை பொழிய அருளுதல்: கோடைக் காலத்தில் தருமசாலைக்கு வந்தவர்கள் வெப்பம் தாங்க முடியா மல் வருந்தியதைக் கண்ட அடிகள் ஒரு செம்பு நீரைத் தம் காலில் ஊற்றும்படி செய்தனர். அவ்வாறு செய்த தும் சிறிது நேரத்தில் மேகங்கள் திரண்டு மழை பொழிந் திது. (8) தீ அணையச் செய்தது: ஒர் இல்லத்தில் தீப்பற்றி எரிந்தபோது அடிகள் இருந்த இடத்திலிருந்தே தமது மேலாடையை வீச தீ அணைந்தது. (9) புன்செய் நன்செய் ஆதல்: அடிகளாருக்கு ஆட் பட்டவர்களுள் வட்டாட்சியாளர் ஒருவர். அவரது மாம னார் மணலூரில் உள்ளவர். தமது புன்செய் நிலங்களை நன்செய் நிலங்களாக்க அதிகாரிகட்குப் பலமுறை விண் ணப்பித்தும் பயன் இல்லை. அதே அன்பர் வள்ளல் பெருமானிடம் வந்து திருநீறு பெற்றுச் சென்ற பின்னர் புன்செய்கள் நன்செய்களாயின. (10) ஒருவரது அகந்தையை அடக்கியது. ஆணவ மலம் மனிதனிடம் அகந்தையாக வெளிப்படும். புதுச் சேரி தந்தி நிலைய மேலாளர் பல மொழிகளில் பயிற்சி யுள்ளவர். ஒருசமயம் அவர் அடிகளைக் காண வடலூர்