பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器 54 + இராமலிங்க அடிகள் ஐயப்பனைச் ‘சாமியே சரணம் ஐயப்பா!' என்று ஐயப் பன் அடியார் சரணம் புகுகின்றனர். 3. பிரார்த்தனை மாலை. இதில் அடங்கிய பாடல்கள் 30; கட்டளைக் கலித்துறையாப்பில் அமைந்தவை. இவை திருத்தணிகை முருகப் பெருமான்மீது அமைந் துள்ளமையால் 'திருத்தணிகைப் பதிகங்கள்’ என்ற தலைப்பின்கீழ்த் தரப்பெற்றுள்ளன. இவற்றில் சில பாடல் கள்: சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஒர் கூர்கொண்ட வேலும் மயிலும்.நற் கோழிக் கொடியும்அருட் கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுறவே (1) அன்னே எனைத்தந்த அப்பாஎன் றேங்கி அலறுகின்றேன் என்னேஇவ் ஏழைக்கு இரங்காது நீட்டித்து இருத்தல்எந்தாய் பொன்னே கருணப் பொருப்பே தணிகைப் பொருப்பமர்த்த 3. உலக வாழ்க்கையில் 'காக்கைப் பிடித்தல்' (கால் கை : பிடித்தல் இத்தத்துவத்தையே மக்கள் கடைப்பிடிக்கின்றனர். இதில் வெற்றி கண்ட பின்னர்தான் மக்கள் மனிதன் காலைப் பிடிப்பதைவிட இறைவன் காலைப் பிடிப்பது மேல் என்ற கொள்கையை வகுத்ததாகக் கருதலாம். இதுவே எல்லாச் சமயத்தினரும் தத்துவமாக வளர்த்துக் கொண்டனர் என்று கருதுவதிலும் தவறில்லை, இஃதோர் அநுபவ வளர்ச்சி, அநுபவ முதிர்ச்சி. 4. இனி அடுத்துவரும் பதிகங்கள் யாவும் தணிகைப் பெருமான்மீது அமைந்த வையே என்பதைப் பாடல்களே அடையாளம் காட்டும்.