பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

緣 70 蠍 இராமலிங்க அடிகள் பெருமிதங் கொண்டு நாயகி நிலையை எய்தி கலிவிருத்த யாப்பில் பத்துப் பாடல்களைப் பாடி பயன்பெறுகின் றார். அவற்றில் நான்கு பாடல்களில் உளங்கரைந்து உருகுவோம். - பூவுண்டவெள் விடையேறிய புனிதன்தரு மகனார் பாவுண்டதொர் அமுதன்னவர் பசுமாமயில் மேல்வந் தாவுண்டனர் எனதின்நலம் அறியார்என இருந்தால் நாவுண்டவர் திருமுன்பிது நலம்.அன்றுமக் கெனவே (1) வாரார்முலை உமையாள்திரு மனவாளர்தம் மகனார் ஆராஅமு தனையார்உயிர் அனையார்அயில் அவனார் நேரார்பணி மயிலின்மிசை நின்றார்.அது கண்டேன் நீரார்விழி இமைநீங்கின நிறைநீங்கிய தன்றே (3) மான்கண்டகை உடையார்தரு மகனார்தமை மயில்மேல் நான்கண்டனன் அவர்கண்டனர் நகைகொண்டனம் உடனே மீன்கண்டன விழியார்அது பழியாக விளைத்தார் ஏன்கண்டனை என்றாள்.அனை என்என்றுரைக் கேனே (6) மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல் நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே பூவீழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே (9) நளினமான பாடல்கள். நான்கையும் நம் நாவில் தாண் டவமாடச் செய்து அநுபவித்தால் ஆறுமுகனாரை மான தக் காட்சியில் கண்டு மகிழலாம். 47. இங்கிதப் பத்து. ஆறுமுகப் பெருமான் மயிலின் மீது உலா வருங்கால் அக்காட்சியில் ஈடுபட்டுக் கொள்ளை போன மகளிரின் மனத்தை மிக இங்கிதமா கச் சொல்லுகிறார் அடிகள் - கலிநிலை வண்ண்த்துறை யாலமைந்த பத்துப் பாடல்களில். நான்கு பாடல்களில் ஆழங்கால் படுவோம். சிவளர் குவளைத் தார்வளர் புயனார் சிவனார்தம் பேர்வளர் மகனார் கார்வளர் தணிகைப் பெருமானார்