பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

家 78 * இராமலிங்க அடிகள் களைக் கொண்டது. தாம் ஏதாவது பிழைகள் புரிந்திருந் தால் அவற்றைப் பொறுத்துத் தம்மை மன்னித்தருளு மாறு விண்ணப்பிக்கின்றார். - தேவியல் அறியாச் சிறியனேன் பிழையைத் திருவுளத் தெண்ணிநீ கோபம் மேவிஇங் கையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே மூவிரு முகம்சேர் முத்தினை அளித்த முழுச்சுவை முதிர்ந்தசெய் கரும்பே சேவின்மேல் ஓங்கும் செழுமணிக் குன்றே திருவொற்றி யூர்மகிழ் தேவே (1) அஞ்செழுத் தோதி உய்ந்திடாப் பிழையை ஜயநின் திருவுளத் தெண்ணி - வெஞ்சன்என் றையோ கைவிடில் சிவனே வேறுநான் யாதுசெய் வேனே கஞ்சன்மால் முதலோர் உயிர்பெற விடத்தைக் களத்திருத் தியஅருட் கடலே சஞ்சித மறுக்கும் சண்முகம் உடையோன் தந்தையே ஒற்றிஎம் தவமே (6) அற்புதமான பாடல்கள். கல்நெஞ்சையும் உருக்கு பவை. கல்வடிவமாக எழுந்திருளியிருக்கும் கடவு ளிடம் சமர்ப்பிக்கும் விண்ணப்பம் கல்நெஞ்சமுடைய நம்மையே நெகிழச் செய்கின்றது. பாடல்கள் யாவும் திருப்பதி இலட்டுபோல் இனிக்கின்றன. பாடிய வாய் தேனுறும் பான்மையனவாய்த் திகழ்கின்றன.' 16. எழுத்தறியும் பெருமாள் மாலை: இங்கு, பதிகம் 31 பாடல்களைக் கொண்ட மாலையாக வளர்ந்து ஒற்றி 1. இரண்டாம் திருமுறையில் திருவொற்றியூர் திருத்தலத்தைப் பற்றி அதிகமான பாடல்கள் காணப் பெறுகின்றன.