"இந்திரப் பெரும்பதம் இழந்தான்" 103 மானிடர் வலியராம் தன்மையும் உண்டோ? கூறுக. நீ போற்றிப் பேசுந் தேவர்கள் ஒருமுறையாவது என்பால் பொருது வெற்றி என்பதைக் கண்டார்களோ ? அவ்வாறிருக்க, என்னையும் கிளையையும் இப்பொழுது அவர்கள் வெல்வார்கள் என்று என்ன நியாயங் கொண்டு கூறினை? கேவலம் வரபலத்தால் யான் இதுவரை வெற்றி கண்டேன் என்று நினைத்து விட்டாய். அவ்வாறாயின், தேவர்கட்குத் தலைவரான அம்மூவரையும்வென்றது யாரிடம் பெற்ற வரத்தால் என்பதைக் கூறுவையோ?” "இரண்டாவதாக, விலங்கால் ஊறு நேரும்' எனக் கூறினை அச் சாபமும் நந்திதேவர் தந்தது என்று கூறினை. அவர்மட்டுமா? தேவர் முதல் சித்தர் வரை நம்மைச் சபியாதவர் யார்? இதுவரை அவர்கள் சாபங்கள் நம்மை என்ன செய்தன? வாலிபால் தோற்றமையை எடுத்துக் காட்டினாய். நன்று அரங்கிலாடும் பெருமானிடம் அவன் பெற்றிருந்த வரத்தை யான் அறியேன். அவன் எதிரே போர் செய்யச் சென்றால், அம்மூவருங்கூடத் தம் வலியில் பாதியை இழப்பரே! இதனை நன்கு அறிந்தவனும் உன்னால் இன்று போற்றப்படுகிறவனும் ஆகிய இராமனே அவனை மறைந்து நின்று அல்லவோ கொன்றான்? மேலும், ஒப்பற்ற வலியுடைய வாலிபால் யான் தோற்றத்தைக் கொண்டு, உலகிடை வாழும் குரங்குகள் எல்லாம் என்னை வெல்லும் என்று என்ன நியாயங்கொண்டு கூறுகிறாய்? உன்னால் புகழப்படும் இராமன் வலிமையை நீ அறியாய் போலும்! ஏற்கெனவே முரிந்திருந்த சிவபெருமானது வில்லை முரித்து, ஒட்டையாகிவிட்ட மராமரத்துள் அம்பைச் செலுத்தி, பெறவேண்டிய ஆட்சியைக் கேவலம்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/120
Appearance