104 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் கூனியினது சூழ்ச்சியால் இழந்து, வனத்தை அடைந்து, எனது சூழ்ச்சியால் மனைவியையும் இழந்து, இன்னும் உயிர் பெரிது என்று கருதி அதனை விடாது சுமக்கும் கேவலம் மனிதனாகிய அவனது வலிமையை உன்னையன்றி யார் மதிக்கமுடியும்?' என்று கூறினான். - இதிலிருந்து இராவணனைப்பற்றி நாம் அறிவ தொன்றுள்ளது. இராகவனைப்பற்றிய முழுத் தகவலையும் இராவணன் அறிந்திருந்தான் என்பது வெளியாகிறது. இவற்றை அறிந்திருந்தும், பகைவனை எளிமையாக மதித்துவிடுகிறான். தன்செயல் ஒவ்வொன்றையும் பெரிதாகவே மதிக்கும் இராவணன், தன் பகைவன் செய்த அரிய செயல்களைக் குறைந்து மதிப்பது வியப்பே. சிவனது வில்லை உடைத்ததும், மராமரத்துள் அம்போட்டியதும் செயற்கருஞ் செயல்களேயாம். எனினும் இராவணனது அலட்சிய மனப்பான்மையால் இவை சாதாரணச் செயல் களாகின்றன. ஒருவன் செய்த அருஞ் செயல் அதனைக் காண்போனது மனப்பான்மைக்கு ஏற்பப் பெரிதாகவும் சிறிதாகவும், சிறப்புடையதாகவும் சிறப்பில்லாததாகவும் கருதப்படும் என்பது நாமறிந்த ஒன்றே. ஏனையோர் கண்டு வியக்கும் ஒரு காரியத்தை இராவணன் எளிமையானதாக மதிக்கிறான். தந்தை சொல்லைத் தலை மேற்கொண்டு கானம் ஏகிய பெருமையைக் கூனி சூழ்ச்சியால் அரசை இழந்தான்' என்று கூறுகிறான். தானே விட்டுக்கொடுத்த அரசியலை, இழந்தான்' என்று கூறுதல் வியப்புடையதே! மேலும், தான் சீதையை வஞ்சகமாக எடுத்துக் கொண்டுவந்துங்கூட, 'இராகவன் மனைவியை இழந்தான் என்று கூறுதல் இன்னும் வியப்பே ! -
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/121
Appearance