உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் அவன் அவசரப்பட்டுச் செய்த காரியம் அடா என்று எடுத்துக் கூறுகிறான். அந்நிலையில் இராமன் மனம் எவ்வாறு இருந்தது என்பதை ஆசிரியனே கூறுகிறான். சுக்கிரீவனுக்கு ஏதேனும் ஊறு நேர்ந் திருக்குமேயாயின், இராமன் வந்த காரியம் என்ன ஆகியிருக்கும்? அந்நிலையிலும் இராமன் இராவ ணனைப் பற்றித் தவறாக ஒன்றுங் கூறவில்லை; கருணை இல்லான் என்றுமட்டுங் கூறுகிறான். எனவே, இராமன் மனம் இருந்த அமைதியான நிலை இதிலிருந்து விளங்குகிறதன்றோ? வாலி மைந்தனாம் அங்கதனைத் துTதாக அனுப்புகிறான் அயோத்தி வேந்தன். அங்கதனும் இராவணனிடம் சென்று வேண்டுமளவு ஏசுகிறான். 'பாவியை, அமருக்கு அஞ்சி அரண்புக்குப் பதுங்கினானை, 'தேவியை விடுக! என்று கூறுமாறு சொல்லி என்னை அனுப்பினான்' என்று அங்கதன் கூறுகிறானே தவிர, இராகவன் அவ்வாறு கூறியதாகக் கவிபாடவில்லை. காரணம், அவ்விதம் இராமன் கூறவியலாமையேயாம். தன் மனைவியை இழந்து நிற்கும் வருத்தத்தால் அங்ங்ணம் கூற இராமனுக்கு உரிமை உண்டேனும், அவ்வாறு கூறியிருப்பின், அவன் இராமனாக மாட்டான். முதற்போர் புரி படலத்திலேதான், இராம இராவணர் நேரே சந்திக்கின்றனர். அமரரும் அஞ்சத் தக்க அருஞ்சமர் நடந்தது. இறுதியில் இராமன் பல கணைகளால் இராவணன் தேர், வில் முதலியவற்றை அழித்து, அவனது மணி மகுடத்தையும் தரையில் உருட்டிவிட்டான். முடியும் வில்லும் இழந்த இலங்கை யோர்கோன் நிலை, இரங்கத்தக்கதாகவே உளது. 'அமர்