பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நாளை வா" எனப்பட்டான் 113 பொருமேல், வெல்லும் அத்தனை அல்லது தோற்றிலா விறலோன் ஆகிய இராவணன், நாணித் தலைகுனிந்து பகைவன் முன் நிற்கின்றான்: 'இன்று அவிந்தது போலும் உன் தீமை! என்று ஆரம்பித்து, முதன் முறையாக இராவணனைப் பாவி!' என்று விளிக்கிறான். அங்ங்ணம் விளிப்பதன் காரணமும் உடன் கூறப்படுகிறது. அறத்தினால் அன்றி அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல் மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி (கம்பன் - 7267) என்று கூறினான். நன்கு கல்வி கேள்விகளிற் சிறந்த வனாய் இருந்தும் கிளையோடும் அழிய முற்பட்டது வருந்தத்தக்கதே' என்றான். மேலும் கூறத் தொடங்கின வனாகி, 'சீதையை விட்டு, உன் தம்பியாம் வீடணனைப் பட்டத்தில் வைத்து அவனுக்கு ஏவல் செய்ய முற்படுவாயேல், உன்னை விட்டுவிடுகிறேன் என்றான். ஆனால், இதற்கு விடை ஒன்றும் இராவணன் கூறவில்லை. எனவே, போரை மீண்டுஞ் செய்தலிலேயே அவனுக்கு விருப்பம் இருக்கிற தென்பதை நன்கு கண்டான் இராகவன். உடனே அவனை இழித்துப் பேசிய நிலை மாறி விடுகிறது. சம வலியுடைய ஒரு பகைவனுக்குத் தரவேண்டிய மரியாதை தந்து பேசுகிறான். அல்லை யாம்எனில் ஆரமர் ஏற்று நின்று ஆற்ற வல்லை யாம் எனில் உனக்குள வலியெலாங் கொண்டு - நில் ஐயா ! (கம்பன் - 7270)