பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“வெலற்கு அரியான் 19 மேல் பல காரணங்களாற் காதல் கொண்டவன். முதன் முறையாக இராகவனைக் கண்டவுடனே, அவன் துணைகொண்டு தன் தலைவன் பகைவனாகிய வாலியை ஒழிக்க முடிவு செய்து கொண்டான்; அந் நிலையில் இராமன்மாட்டு நன்றியும் அன்பும் கொண்டுள்ள அவனுக்கு, இராவணன்பால் பகைமை தோன்றுதல் இயல்பு. அடுத்தபடியாக இராவணனைப் பற்றி அவன் அறிவது சம்பாதியாகிய கழுகின் தலைவனாலாகும். சம்பாதியும் இராவணனைப்பற்றித் தீயவன் என்ற கருத்தையே தந்தான். எனவே, இலங்கை வேந்தனை நடுவுநிலை பிறழாது ஆராயும் சந்தர்ப்பம் அனுமனுக்கு இல்லை. ஆனாலும், அவன் தானும் அஞ்சத் தக்க வலிமை கொண்டவன் இராவணன் என்பதை மட்டும் நன்கு அறிந்துள்ளான். சம்பாதியும் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளான். இம் மன நிலையோடு இலங்கையிற் குதித்தான் காற்றின் மைந்தன். இலங்கை முழுவதையும் தன்னைப் பிறர் காணாவகை சுற்றித் திரிந்த அனுமன், இறுதியாக இராவணன் கோயிலை அடைந்தான். இராவணன் காம நோயுற்றுப் பொய் உறக்கம் உறங்குகிறான். திசை யானைகளின் தந்தங்கள் அழுத்தப் பெற்ற மார்பினையும், பகைவர்மணிமுடி படலால் தழும்பு பெற்ற கால்களையும் கண்டான். இந்திர சித்தனைக் கண்ட பொழுது அவனது வீரத்தைப் புகழ்ந்த அனுமன், இராவணன் வீரத்தில் இப்பொழுது ஈடுபடவில்லை. மனத்தில் நிறைந்துள்ள பகைமை முற்றுகிறது. மேலும், வெவ்வமர் தொடங்கின் என் ஆய் முடியும்?' என்று முன்னமே நினைந்தவனாகலின், 'இப்பொழுதே, இராவணனை, உறங்கும் பொழுதே