உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வெலற்கு அரியான் 121 என்றால், வேரொடும் அமரர்தம் புகழ் விழுங்கினான் என்று ஆசிரியனே கூறுகிறான். இந்நிலையில் தூதன் போல் நடிப்பதே தக்கது என்று முடிவு செய்துள்ள அனுமன் கூறத்தொடங்குகிறான்; பலவகையாலும் இராவணனுக்கு அறிவுரை வழங்குகிறான்; உனது எல்லையற்ற வரம் முதலியவற்றைத் தீட்டிய பகழி ஒன்றால் முதலொடு நீக்க நின்றானாகிய இராமன் தூதுவன் யான் என்று கூறுகிறான்; மேலும், வாலியைக் கொன்றவன் துதுவன் என்று சொல்லியவுடன் இராவணன், குலப்பகைவனோடு உறவா பூண்டுள்ளீர்?' என்று எள்ளி நகையாடுகிறான். அந்நிலையைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இராவணன் சில கூறத் தொடங்கு முன், அவன் மனநிலையைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைந்து, அனுமன் சில பன்னினான். ஐயனே! கேட்பாயாக காமச் செருக் கினால் திறந்திரும்பியவர் யாவர் பிழைத்தார் ? காமத்தால் இறந்தார். களிவண்டுறை தாமத் தாரினர் எண்ணினுஞ் சால்வரோ? நீயோ, புகழைப் பெரிதும் விரும்புகிறாய்! இச்செயல் புகழின் பாற்படுமோ? ஆராய்க! . இச்சைத் தன்மை யினில்பிறர் இல்லினை நச்சி நாளும் நகையுற நாண்இலன் பச்சை மேனி புலர்ந்தது பழிபடுஉம் கொச்சை ஆண்மையும், சீர்மையிற் கூடுமோ? . (கம்பன் - 5903) இங்ஙனம் நல்லுபதேசம் செய்த அனுமன் இறுதியில், நீ உயிர் பெற்று வாழ வேண்டுமேயாயின், சீதையைத் தருக எனக் கூறினான். இறுதி வார்த்தை கள் இராவணற்குக் கோபம் மூட்டிவிட்டன. இதனை