122 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் எனக்குச் சொல்ல ஒரு குரங்கு வந்தது, மிகவும் நன்று! என்று கூறிச் சிரித்து, "உனது உபதேசம் ஒருபுறம் நிற்க, துது வந்த நீ ஏன் என் படைஞரைக் கொன்றாய்? என்றனன் இராவணன். இச் சந்திப்பிலிருந்தே, அனுமன், இராவணன் படை வலியையும் மதிவலியையும் நன்கு அறிந்து கொள்கிறான். அனுமன் வேண்டுமென்றே சில குறிப்புகள் தந்தான். வாலிபால்தோற்றவன் இராவணன் என்பது யாவரும் அறிந்த தொன்றே! எனவே, அத்தகைய வாலியை அடுகணை ஒன்றாலே கொன்றான் இராமன் என்று கூறினால், இராமன் வலிமையை இராவணன் அறிதல் கூடும் என்று நினைந்தான் அனுமன். அங்ங்னம் அவன் நினைந்திருப்பின், பிழைபட்டான். அவனுக்கு முன்னரே, வீடணனும் கும்பகருணனும் இதனைக் கூறிவிட்டிருந்தனர். எனவே, அனுமன் இதனைக் கூறியும் இராவணன் சட்டை செய்யவே இல்லை. 8. இடிக்குநர் இல்லான்' இராவணன் பகைவராயுள்ளார் அனைவரிலும், மிகுதியும் அவன்பால் வெறுப்புக் கொண்டவள் சீதை யேயாவாள். முதன் முதலாகச் சீதை இராவணனை வனத்தில் சந்திக்கிறாள்; துறவுக் கோலம் பூண்ட அவனை இன்னானென்று அறியாது உரையாட ஆரம்பித்துவிட்டாள். அவளால் ஆசனம் தரப்பட்டு அதில் அமர்ந்த இராவணன், அவளை யாரென்று வினவுகிறான். அக் கேள்வியால் நம்மை முன் பின் அறியாதவர் இப்பெரியார், என நினைந்து, சீதை
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/139
Appearance