பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பணகைப் படலம் 153 அரசன் என்ற நிலையில் இராவணன் செயலை நாம்ஏற்றுக் கொள்ளுகிறோம்; ஆனால், சூர்ப்பணகை இதை அறிந்து கொண்டு ஆறுதலடைவாளா? மூக்கை யிழந்து வருந்தும் நிலையில், அவளை இவ்வளவு மேம்பட்ட பண்பாட்டைப் பெற்றிருக்குமாறு வற்புறுத்துவது நமக்கே அழகுடையதாகாது. இதை நம்மைப் போலவே நன்கு உணர்ந்த இராவணன், எத்துயர் உனக்குளது? இனிபழி சுமக்க பத்துள தலைப்பகுதி; தோள்கள்பல அன்றே ? (கம்பன் - 3127) 'இனி உனக்கேன் கவலை ? உனக்கு நேர்ந்தபழி என்னையே சேரும். என்னை விசாரப்பட விட்டு விட்டு, நீ ஆறுதலடை என்று தேறுதல் கூறியதோடு அவன் நின்றுவிடவில்லை. இவற்றாலும் அவள் ஆறுதல் பெறமாட்டாள் என்பதை அவன் அறியாமலிருந்திருப்பானா? ஆகவே, அவள் தனக்காகத் தன் சகோதரன் எதையும் செய்வான் என்று ஆறுதலடையட்டும் என எண்ணி, கரன் உனக்கு உதவி செய்யவில்லையா? என்று கேட்டான். தங்கையின் நிலைக்கு உண்மையாய் வருந்திய இராவணன், அரசன் என்ற முறையில் தான் ஒன்றுஞ் செய்யக் கூடாமலிருப்பதை அவள் அறிந்து கொள்ள வேண்டா என்ற நோக்கத்துடனேயே, அவள் நிலைக்குத் தான் வருந்துவதை விவரித்துவிட்டு, 'என் தம்பி உனக்கு உதவி செய்யவில்லையா? என்றும் கேட்டான். ஆனால், சூர்ப்பணகை இராவணன் மன நிலையை உணரவில்லை. அவன் இன்னும் போருக் கெழாதது அவளுக்கு மிகுந்த மனக் கசப்பைத் தந்தது.