பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பணகைப் படலம் 155 தாருடைத் தானை யோடும் தம்பியர் தமியன் செய்த போரிடை மடிந்தார் என்ற உரைசெவி புகாத முன்னம் காரிடை உருமின் மாரி கனலொடு பிறக்கு மாபோல் நீரொடு நெருப்புக் கான்ற நிறைநெடுங் கண்க ளெல்லாம் ! (கம்பன் - 3131) என அவன் கரன் முதலிய வீரர் இறந்ததைக் கேட்கு முன்னரே கண்ணிரைச் சொரியத் தலைப்பட்டான் என்று அறிவிக்கிறான். இவ்வாறு அவள் நிலைக்கு வருந்தி அழுத இராவணனுக்குக் கரன் முதலியோர் இறந்த செய்தி மேலும் திகைப்பைத் தந்தது. இப்பொழுது தங்கை பரிபவப்பட்டதோடு, தம்பியர் இறந்ததற்கும் அவன் வருந்தவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. - ஆயிடை எழுந்த சிற்றத்து அழுந்திய துன்பம் மாறி தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்துக்கு ஊற்றம் செய்ய நீயிடை இழைத்த குற்றம் என்னைகொல் நின்னை இன்னே வாயிடை இதழும் மூக்கும் வலிந்தவர் கொய்ய? (கம்பன் - 3132) தங்கையின் நிலை தோற்றுவித்த அவமானம், அவள் விருப்பப்படியே அவளுக்கு உதவி செய்ய முன் வர முடியாமலிருப்பதைக் குறித்த இரக்கம், அவள் தன்னிலையை உணராது தன்னைக் குற்றஞ் சாட்டப் புகுந்ததற்கு வெறுப்பு, தன் நிலையைச் சற்றும் சட்டை செய்யாது மானிடர் தன் தங்கைக்கும் தனக்கும் பங்கம் விளைவித்ததால் ஏற்பட்ட கோபம், இத்தகைய பல மனநிலைகளில் மாறிமாறி வீழ்ந்து மயங்கியிருந்த இராவணனுக்கு, கரன் முதலியோர் இறந்ததைக் கேட்டதும் பெருந்துன்பம் ஏற்பட்டது. 'தான் அவமானப்பட்டதோடு, என்னையும் வருந்தச் செய்து, என் தம்பியையும் கொல்வித்தாளே! இவள் இவ்வாறு