156 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் செய்வதற்குத் தகுதியுடையவள் தானா? என்ற ஆராய்ச்சி இராவணனுக்கு ஏற்பட்டது. முன்னர் அவள் நிலைக்கு இரங்கி அவளைக் கேட்கக் கூசியவன், இப்பொழுது தன்னை அவள் அன்பிலானாக மதித்ததையும், கரனைக் கொல்வித்ததையும் கருதி, 'இவ்வாறு உன்னை அவர்கள் அவமானப்படுத்த நீ அவர்களுக்கு என்ன குற்றம் செய்தாய்! என்று கேட்டு விட்டான். இராவணன் தன் கடமையை உணர்ந்த வேந்தன் மட்டுமல்லன் மிகச் சிறந்த அறிவு நுட்பமுள்ளவன் என்பதை அவர்கள் ஏன் இவ்வாறு செய்தார்கள்? என்று கேட்காமல், 'நீ என்ன குற்றம் செய்தாய்? என்று அவன் கேட்ட கேள்வியாலேயே அறிய முடிகின்றது. காணாதவரிடத்தில் குற்றம் சாட்டுதல் அறிஞனுக்கு அழகன்று. சூர்ப்பனகை தன் உடன் பிறந்தவளா தலால், இராவணன் அவள் குணத்தை நன்குணர்ந்த வனாயிருக்க வேண்டுமன்றோ? அவள் இப்பொழுது தன்னைப் பழித்ததைக் கொண்டே, அவள் குறையுடையவள் எனத் தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கலாமன்றோ? இவ்வாறு உணர்ந்தும், அவன் தங்கையினிடத்து வைத்த அன்பால் குற்றமிழைக்காது, நடுவுநிலை வழுவாது நடந்து கொண்டது, அவன் அறிவின் எல்லைக்கு ஓர் எடுத்துக் காட்டு வாயிடை இதழும் மூக்கும் வலிந்து அவர் கொய்ய' என்று அவன் கூறிய தொனியே, இவ்வாறு செய்ய எவரும் முன் வாரார் என்றும், செய் திருப்பதைக் கண்ணாற் காண்கிறானாகையால், செய்த வர்க்குச் சூர்ப்பணகை பெருங்குற்றம் செய்திருக்க
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/173
Appearance