பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூர்ப்பனகைப் படலம் 167 கரனைப் போலவே இராவணனும் தன் தங்கையைக் கண்டதும், இது யாவர் செயல்? என்று கேட்டான். மூக்கரியப்பட்டவுடன், நசையாலே மூக்கிழந்து நாணமிலா நான்பட்ட வசையாலே நினதுகழ் மாசுண்டது ஆகாதோ? திசையானை விசைகலங்கச் செருச்செய்து மருப்பொசித்த இசையாலே நிறைந்தபுகழ் இராவணவோ இராவணவோ ! - (கம்பன் - 284) என்று அரற்றியவள், இங்கு இராவணன் வேள்விக்குப் பதில் கூறும் முறையே விநோதமாய் இருக்கிறது! அவன் கேள்விக்கு ஏற்ற அளவே விடை கூறுபவளைப் போல அவமானஞ் செய்வித்தவரை மட்டும் குறிப்பிட்டாள். அதனையும், இராவணன் செருக் கிற்குத் துரபம் போடுபவளைப்போல 'மானுடர் தடிந்தனர்கள் வாளுருவி என இகழ்ச்சிக் குறிப்புத் தோன்றக் கூறினாள். இராவணனுக்குச் சூர்ப்பனகை கூறியது அதிசயமாய் இருந்தது. 'மனிதர்கள் இவ்வாறு செய்யத் துணிவார்களா? என்ற அவன் எண்ணம், தங்கை கூறுவனவற்றை ஏற்க மறுத்தது. விவரமாகக் கூறும்படி அவன் அவளுக்குப் பணித்தான். அவள் மீண்டும் அவன் கேட்ட கேள்விக்குச் சரியானபடி பதிலளிக்காமல், இராம இலக்குவர், அழகு வீரம் முதலியவற்றைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது குறிப்பிடத் தக்கது. - ஆறுமணம் அஞ்சினம் அரக்கரை எனச்சென்று ஏறுநெறி அந்தணர் இயம்பஉல கெல்லாம் வேறுமெனும் நுங்கள் குலம் வேரொடும் அடங்கக் கோறுமென முந்தையொரு சூளுறவு கொண்டார் (கம்பன் - 3122)