தீமையின் முதற்படி 8 171 அவனுக்குள்ள பற்றுதலைச் சூர்ப்பனகை தன் சூழ்ச்சிக்கு அடித்தளமாக அமைத்துக் கொண்டாள். அவள் வெற்றிபெற்றிருப்பது, அவனுடைய குண விசேடத்தை அவள் எத்துணை நுட்பமாக அறிந்திருந்தாள் என்பதையே காட்டுகிறது. சீதையின் வருணனையைக் கேட்ட இராவணன் அனைத்தையும் மறந்தான். சீதையின் பெயர் ஒன்றே அவன் மனம் முழுவதையும் பற்றிக்கொண்டது. மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நீண்ட எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான் ! (கம்பன் - 3151) ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்தவன், தங்கை அவமானத்தைக் கண்டும் அரச நீதி வழாதவன். இப்பொழுது பெண்ணின்பம் காரணமாக, அயலான் மனைவியின்மேல் மையல் கொண்டான். இராவணன் வீழ்ச்சியின் முதற்படி இதுவே என்பதைக் கும்பகருணன், என்றொருவன் இல்லுறை தவத்தியை இரங்காய் வன்றொழிலி னாய்மறை துறந்துசிறை வைத்தாய் அன்றொழிவ தாயின. அரக்கர்புகழ் ஐய! . (கம்பன் - 6.121) எனக் குறிப்பிடுகின்றான். 2. தீமையின் முதற்படி மனிதனுக்கு இயற்கையாய் உள்ள உணர்ச்சிகள் அனைத்தினும் காமவுணர்ச்சி வன்மை வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். உலகம் தோன்றிய நாளி லிருந்து இவ்வுணர்ச்சியை அடக்கியாள வழி
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/188
Appearance