186 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் வீரத்தை மட்டும் இழந்துவிடவில்லை; புகழையும் போக்கிக் கொண்டான் என்பது விளங்குகின்றது. மனவுரம் மிக்குடைய எவரும், எக்காரியத்தைச் செய்ய எடுத்துக்கொண்டார்களோ அக்காரியத்தை வெற்றியடைச் செய்வதிலேயே தம் (ԼՔ(ԼՔ ஆற்றலையையும் செலவிடுவர். இப்பண்பு காரண மாகவே அன்னார் மக்களுள் உயர்ந்தோராக மதிக்கப்படும் பெருமையை அடைவர். இராவணன், சீதையின் நினைவால் உழந்து வருந்துவதும், அவளை வெற்றி கொள்ளச் செய்யும் முயற்சியில் மற்றெல்லாவற்றையும் கவனிக்காமலிருப்பதும், இயற்கையான மனிதவுணர்ச்சிகளுக்குக்கூடத் தன் மனத்தில் இடமளிக்காமல் இருப்பதும் அவன் மனவுரம் பெரிதும் படைத்தவன் என்பதைக் காட்டு கின்றன. ஆனால், அவன் அதனைச் செயற்கரிய செயலைச் செய்வதற்குப் பயன்படுத்தாமல், செயற்கு உரியதல்லாத செயலைச் செய்வதில் செலுத்துகிறான். ஆகவேதான் வெற்றியடையாததோடு, தான் ஏற்கெனவே ஈட்டியிருந்த புகழையும் இழக்கிறான். வீரம், மானம் என்ற உணர்ச்சிகள் மழுங்கி விடுகின்றன. இல்லையேல், மந்திர சபையில் இருந்த ஒவ்வொருவனும், நான் அப்பொழுதே சீதையைக் கவர்ந்து வருதல் பழிச்செயல் என்று சொன்னேனே! அதற்கு நீ செவி சாய்க்காமல் இப்பொழுது அழுகிறாயே! என்று பழித்துக் கூறியும், அவன் அதைப் பொருட்படுத்தாமல் இருந்திருப்பானா? உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினும் காமம் இனிது (திருக்குறள், 1201)
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/203
Appearance