பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீமையின் வளர்ச்சி 4 187 கள், குடித்த பின்பே மய்க்கத்தைத் தரும்; அம்மயக்கமும் சிறிது நேரம் கழித்து நீங்கிவிடும். ஆனால், காமம், நினைத்த மாத்திரத்திலேயே மயக்கத்தைத் தரும். அம் மயக்கம் நீங்குவதும் அரிது. நினைக்குந் தோறும் மயக்கம் மிகுதியாகுமன்றோ? கிடைத்தற்கரிய ஒரு பெண்ணிடத்தே காதல் கொண்டான் இராவணன். நல்லதோ, தீயதோ - அவளைத் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்தாயிற்று. அவள் உடலை அவன் சிறைப்படுத்தியாயிற்று. இவ்வெற்றி, இனி அவள் மனத்தையும் முயன்றால் சிறைப்படுத்திவிடலாம்' என்ற நம்பிக்கையை இராவணன் மனத்தில் தோற்றுவித்து விட்டது. இந் நம்பிக்கையால் சிறைப்படுத்தப்பட்ட இராவணன், தன் வீரம், புகழ் முதலியவை அழிவதைக் காணும் சக்தி இல்லாத வனாய் இருந்ததில் வியப்பென்ன? வீரம், மனவுரத்தை நிலைக்களனாகக் கொண்டது. இராவணன் மனம் இப்பொழுது முற்றிலும் சீதையைத் தன் வசப்படுத்துவதில் ஈடுபட்டி ருப்பதால், அதைப் பற்றுக் கோடாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருந்த வீரம், நிலைக்களன் இல்லாத காரணத்தால் அழிந்தது. வீரம், இம்மைப் புகழையே பயக்கும் தன்மையுடையது; ஆகவே, இராவணன் அதை இழந்ததால், இம்மையில் பெறும் பயனை இழந்தான். புகழும் வீரத்தைப் போன்றதொன்றே. அதுவும் மனத்தையே நிலைக்களனாகக் கொண்டது. வீரம், புகழ் என்னும் இரண்டும் அவாவைக் காரணமாகக்கொண்டு தோன்றுவன. வீரம், இம்மை இன்பத்தை அளிப்பதோடு நின்றுவிடுகின்றது. ஆனால்