208 இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் சென்றான் என்று கூறுவதற்கில்லை. மகோதரன் இச்செயலைச் செய்ய வேண்டா என்று தடுத்துப் பேசுகையில் மூன்று காரணங்களைக் காட்டுகிறான்: (1) ஒரு பெண்ணைக் கொல்வது இராவணன் வாளுக்கே பழியாகும்; (2) சீதை இறந்தொழிந்தால், இராமன் முதலியோர் திரும்பிவிடுவர் (3) இராமனை வென்று திரும்புகையில், இராவணன் யார் பொருட்டு இதுகாறும் போராடினானோ, அச்சீதை இன்மையால் மனமுடைய நேரும். இவற்றைக் கேட்ட பின் இராவணன் சீதையைக் கொல்வதைத் தவிர்த்தான். இவற்றுள் எக்காரணம்பற்றி அவன் கொண்ட கருத்தைக் கைவிட்டான் என்பது திடமாகக் கூறுவதற்கில்லை. முதற்காரணமே அவன் மனத்தில். இந் நிலையில், சிறந்ததாகப் பட்டிருக்கும் என்று கூறலாம. இராவணனை இதுகாறும் செயல் புரியத் துரண்டிய காம மயக்கம், செருக்கு என்னும் இரண்டனுள், மேகநாதன் இறந்ததால் முன்னது வலியிழந்தது எனத் தெரிகிறது. ஏனெனில், இராவணன் அதன் பின் அவ் விருப்பத்தையோ, தன் மனத்தில் காமம் இடம் பெற்றிருக்கிறது என்பதையோ வெளிக் காட்டவில்லை. தனக்குக் கேட்டையும் துன்பத்தையும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை இராவணன் வெளியிடுகிறான். அவனுக்கு இன்னும் காம மயக்கம் இருந்திருந்தால், அவ்வாறு கூறியிருக்கமாட்டான். ஆனால், அக்காரணம்பற்றி அவன் அம்மயக்கத் தினின்று முற்றிலும் விலகிவிட்டான் என்று கூறுவதற் கில்லை. முன்னரும் அவன் சீதை மனம் துயரடையக் கூடிய பல செயல்களை விரும்பிச் செய்திருக்கிறான்; அவன் மன நிலையை நன்குணரும் மகோதரன்
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/225
Appearance