கலைஞன் வீழ்ச்சி 9 215 வீட்டனன் சீதை தன்னை என்றலும் விண்ணோர் நண்ணிக் கட்டுவ தல்லால் பின்னை யான்எனக் கருது வாரோ? பட்டனன் என்ற போதும் எளிமையிற் படுகி லேன்யான் எட்டினோடு இரண்டும் ஆய திசைகளை எறிந்து வென்றேன் ! (கம்பன் - 9125, 9126) இதனாலேயே இறுதிநாட் போருக்கு அவன் புறப்படுகையில் மிக்க அமைதியோடு பூசனை முறையால் செய்து புறப்படுகிறான். சித்தத்தை அடக்கிய கலைஞன் ஒருவனுக்கே இவ்வமைதி ஒல்லும். பூசையைத் தன் மனம் நிறைவடையும் முறையில் நிறைவேற்றிய பின், இராவணன், துரகமின்றெனினும் நினைந்துழிச் செல்வதோர் தேரில் ஏறிப் போர்க் களத்துக்குச் சென்றான்; பூசை செய்யுங் காலத்தில் இருந்த மனநிலை நீங்கி, களத்துள் புகுந்த பின் மறமும் வீரமும் விளங்க நின்றான். மன்ற லம்குழல் சனகிதன் மலர்க்கையான் வயிறு கொன்று அலந்து அலைக் கொடுநெடுந் துயரிடைக் குளித்தல் அன்று.இது என்றி.டின் மயன்மகன் அத்தொழில் உறுதல் இன்றி ரண்டின்ஒன்று ஆக்குவென்! ... (கம்பன் - 9667) என்ற வஞ்சினத்தை மேற்கொண்டான். மேகநாதனை இழந்த அணிமையில் இருந்த நிலையினின்றும் இன்று இராவணன் பெரிதும் மாறி விட்டிருக்கின்றான். இப்பொழுது அவனுடைய காம மயக்கம் ஓரளவு சிதைந்திருந்ததேயொழிய, செருக்கு எள்ளளவும் குறையவில்லை. வெற்றி நிச்சயம் என்ற உறுதி இருந்தது. மூல பலம் அழிந்த பின் இ.மா.வி.- 16
பக்கம்:இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்.pdf/232
Appearance